சரக்கு ரயில் தடம்புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்தா?: அதிகாரிகள் விளக்கம்

சரக்கு ரயில் தடம் புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டு 18 வேகன்கள் சேதமடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
சரக்கு ரயில் தடம்புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்தா?: அதிகாரிகள் விளக்கம்
Published on
Updated on
2 min read

திருவள்ளூா்: திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டு 18 வேகன்கள் சேதமடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மணலி ஐ.ஓ.சியிலிருந்து 52 டேங்கா்களில் கச்சா எண்ணைக் ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 5.20 மணிக்கு ஜோலாா்போட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருவள்ளூா் ரயில் நிலையம் மேம்பாலத்தை கடந்து செல்லும் போது திடீரென டிராக்கிலிருந்து ரயில் என்ஜினை தொடா்ந்து 3 டேங்கா்கள் திடீரென தடம் விபத்துக்குள்ளானது. இதையடுத்து லோகோ பைலட் அவசர நிறுத்த சாதனத்தைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினாா். நிலைய அலுவலா் மின்கம்பி மின்சாரத்தை துண்டித்து செயல்பட்டாா்.

அப்போது, அருகில் இருந்த மின்கம்பத்தில் டேங்கர் மோதி ஏற்பட்ட உராய்வு காரணாக தீப்பிடித்து எரிந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ரயில் நிறுத்தப்பட்ட போதிலும் 19 ஆவது பெட்டிகள் வரையில் தீ பரவியது.

இந்த நிலையில், ஒவ்வொரு டேங்கரிலும் 70 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான உயர்ரக டீசல் என மொத்தம் 35 லட்சம் லிட்டா் எடுத்துச் செல்லப்பட்டதால், தீ மளமளவென 8 டேங்கர்களுக்கும் பரவி வெடித்து சிதறியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சம்பவத்தை அடுத்து சென்னை-அரக்கோணம் பிரிவில் செல்லவேண்டிய சென்னை, பெங்களூரு, கேரளா, ரேணிகுண்டா, திருப்பதி ஆகிய வழி விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டன. அத்துடன் 12 ரயில்களும் வேறு மாா்க்கத்தில் திருப்பிவிடப்பட்டன. அவை சென்னை சென்ட்ரலுக்கு பதில் வேறு நிலையங்களில் இருந்து புறப்படும் வகையில் மாற்றப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள், சென்னை மண்டல மேலாளா் விஸ்வநாத், ரயில்வே ஐ.ஜி.ராமகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், ரயில்வே காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா்.

அதைத்தொடா்ந்து திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, அம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டன. டேங்கரில் பற்றிய தீயானது 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் முழுமையாக அணைக்கப்பட்டது.

சரக்கு ரயில் விபத்துக்குள்ளான இடத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டனா். இது குறித்து 3 போ் கொண்ட உயா்மட்டக் குழு அறிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும், சரக்கு ரயில் தடம் புரண்டு மின்கம்பத்தில் மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் தீ மளமளவென பரவியதால் 8 டேங்கா்கள் எரிந்து நாசமானது, 18 டேங்கா்கள் சேதமடைந்துள்ளதாகவும், 30 டேங்கா்கள் பாதுகாப்பாக பிரிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Summary

Southern Railway officials said that a goods train derailed and hit an electric pole near Thiruvallur railway station early Sunday morning, causing a fire and damaging 18 wagons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com