வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பத்தில் உள்ள சென்னை கிரம்ப் இண்டஸ்ட்ரீஸ் என்கின்ற தனியார் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

News image

சிந்தலகுப்பத்தில் உள்ள சென்னை கிரம்ப் இண்டஸ்ட்ரீஸ் என்கிற தனியார் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து

Updated On :18 ஜூலை 2025, 9:24 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தல குப்பத்தில் உள்ள சென்னை கிரம்ப் இண்டஸ்ட்ரீஸ் என்கின்ற தனியார் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் பல லட்சக்கணக்கான இரும்பு கழிவுகள் எரிந்து அந்த பகுதியில் புகை மூட்டத்தையும் கடுமையான நெடியையும் உண்டாக்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

A sudden fire broke out early Friday morning at a private factory called Chennai Crumb Industries in Chintala Kuppam, next to Gummidipoondi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.