நீர்பிடிப்புப் பகுதியில் மழை: திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணை
பாபநாசம் அணை
Published on
Updated on
1 min read

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

நிகழாண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையின் மூலம் பாசனம் பெற்று வரும் தெற்கு மற்றும் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையம் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய கால்வாய்கள் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு முழு அளவில் கார் பருவ சாகுபடி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நீர்பிடிப்புப் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 123.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4401.12 கனஅடி நீர்வரத்து உள்ளது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் 15 மி.மீ., சேர்வலாறு அணையில் 14 மி.மீ., மழை பதிவாகியுள்ளன.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 139.50 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 95.62 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 487.81 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 175 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் 4.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருவதால் மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளிலும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

மழையளவு (மில்லி மீட்டரில்):

கன்னடியன்கால்வாய் 9 மி.மீ., அம்பாசமுத்திரம் 20 மி.மீ., சேரன்மகாதேவி 6.40 மி.மீ.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Summary

Cheran Mahadevi. Due to continuous rains in the catchment area of the dams in the Western Ghats, the water inflow to the Papanasam and Manimutharu dams in Tirunelveli district has increased significantly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com