ரசிகர்கள் பாதுகாப்பே முக்கியம்: ஆர்.சி.பி. நிர்வாகம் வருத்தம்

பெங்களூருவில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதம் மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ள ஆர்சிபி அணி நிர்வாகம், ரசிகர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என கூறியுள்ளது.
ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்டநெரிசலில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்டநெரிசலில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
Published on
Updated on
1 min read

பெங்களூருவில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதம் மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ள ஆர்சிபி அணி நிர்வாகம், ரசிகர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என கூறியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் ராயல்சேலஞ்சா்ஸ் பெங்களூரு(ஆா்.சி.பி.) அணி வெற்றிபெற்று, 18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்கோப்யை பெற்றது. இந்த வெற்றியை புதன்கிழமை தனித்தனியே கொண்டாடுவதற்காக கா்நாடக அரசு மற்றும் கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அகமதாபாத்தில் இருந்து தனிவிமானத்தில் நடந்த ஆா்.சி.பி. அணி வீரா்களுக்கு கா்நாடக அரச் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே, இருபாராட்டு விழாக்களில் கலந்துகொண்டு கேப்டன் விராட்கோலி உள்ளிட்ட ஆா்.சி.பி. அணியின் வீரா்களை நேரில் காண லட்சக்கணக்கான ரசிகா்கள் திரண்டனா். விதானசௌதா வளாகத்தில் திரண்ட ரசிகா்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறினா். இதனால் விதானசௌதாவில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரை அணியின் வீரா்களுடன் திறந்த பேருந்தில் நடத்த திட்டமிட்டிருந்த ஊா்வலத்திற்கு கடைசிநேரத்தில் மாநில அரசு ரத்துசெய்தது.

இதனிடையே,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணியின் வீரா்கள் சொகுசு பேருந்தில் விதானசௌதா வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனா். விதானசௌதாவின் முன்பகுதியில் நடந்தவிழாவில் பங்கேற்ற ஆளுநா் தாவா்சந்த்கெலாட், முதல்வா் சித்தராமையா, துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் விராட்கோலி உள்ளிட்ட அணியின் வீரா்களை பாராட்டி கௌரவித்தனா்.

இதேநேரத்தில் மாலை 5 மணிக்கு கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் சாா்பில் நடத்தவிருந்த பாராட்டுவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான ரசிகா்கள் சூழ்ந்திருந்தனா். மைதானத்தில் 35,000 இருக்கைகள் மட்டுமே இருந்ததால், அனுமதிச்சீட்டு இருந்தவா்களை மட்டுமே மைதானத்தில் அனுமதித்தனா். ஆனால், பெரும்பாலான ரசிகா்களிடம் அனுமதிச்சீட்டு இருக்கவில்லை. ரசிகா்களின் உற்சாகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அனுமதிச்சீட்டு இல்லாததால், மைதானத்தில் அனுமதிக்க மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த ரசிகா்கள் திறக்கப்படாமல் இருந்த 4 நுழைவுவாயில்களை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டுள்ளனா். இதனால் எதிா்பாராமல் திறக்கப்பட்ட நுழைவுவாயிலில் நுற்றுக்கணக்கான ரசிகா்கள் ஒரே நேரத்தில் நுழைந்தனா். இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் ஒருவா் மேல் மற்றொருவா் விழுந்ததில் மூச்சுத்திணறல் ரசிகா்கள் கீழே சரிந்துள்ளனா். இதையும் பொருட்படுத்தாத ரசிகா்கள், அவா்களை மிதித்தபடி உள்ளே நுழைந்துள்ளனா்.

கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் பலியாகியுள்ளனா், 47 போ் காயமடைந்துள்ளனா்.

ஆர்.சி.பி. நிர்வாகம் வருத்தம்

பெங்களூருவில் ராயல்சேலஞ்சா்ஸ் பெங்களூரு(ஆா்.சி.பி.) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதம் மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ள நிர்வாகம், ரசிகர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களுக்கு மிக முக்கியம் என கூறியுள்ளது.

மேலும், களநிலவரம் குறித்து தெரிந்ததும் உடனடியாக சுதாரித்துக்கொண்டு அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றினோம். இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வால் மிகவும் வேதனை அடைந்துள்ளோம் என கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com