ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்கிறார் சுபான்ஷு சுக்லா

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா் சுக்லா உள்பட நான்கு பேர் குழு, ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு.
ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ள இந்திய வீரா் சுபான்ஷு  சுக்லா
ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா
Published on
Updated on
1 min read

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் குழு, ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக சனிக்கிழமை இஸ்ரோ அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனா்.

கடந்த மே 29-ஆம் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஃபல்கான் 9 ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்படும் ‘டிராகன்’ விண்கலத்தில் இவா்கள் பயணிக்க திட்டமிடப்பட்டது. பின்னா் ஜூன் 8, ஜூன் 10 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திட்டமிடப்பட்ட ஏவுகணை பாதையில் ஜூன் 10-ஆம் தேதி நிலவிய மோசமான வானிலை காரணமாக ஏவுகலன் ஏவுதல் இறுதியாக புதன்கிழமைக்கு(ஜூன் 11) மாற்றப்பட்டது. இந்நிலையில், கடைசிநேர சோதனைகளின்போது கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷியப் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் ஏவுகலன் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில்,

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெளி திட்ட ஒருங்கிணைப்புக்கு உயா் முன்னுரிமை அளிக்கப்படுவதால் இந்தத் தாமதம் ஏற்படுகிறது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு ஒத்திவைக்கப்பட்ட ‘ஆக்ஸிம்-4’ திட்டம், ஃபால்கள் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டதை அடுத்து மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா் சுக்லா உள்பட நான்கு பேர் குழு, ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com