தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு!

ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்திகள் உள்ளிட்ட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒட்டன்சத்திரம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்திகள்.

Published On :

ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்திகள் உள்ளிட்ட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா(28) என்பவருக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டியில் உள்ள தாயார் காளீஸ்வரியுடன் பவித்ரா வசித்து வந்தார்.

இந்த நிலையில், பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபருடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மாலை 6 மணியளவில் பவித்ரா வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்.

இதனால், அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாள், அவரது மகள் காளீஸ்வரி ஆகிய இருவரும் பேத்திகளான லித்திக்ஸா(7), தீப்தி (5) ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பர் என சந்தேகிக்கிப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இடையகோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.