ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

காயமடைந்து சிகிச்சை பெற்ற யானை உயிரிழப்பு!

ஜார்க்கண்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற யானை உயிரிழந்துள்ளதைப் பற்றி...

கோப்புப் படம்

Updated On :

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த யானை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்டேகா மாவட்டத்தின் அவ்கா-கர்ஸா வனப்பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு வலது காலில் காயமடைந்த நிலையில் யானை ஒன்று சுற்றி வருவதாக கிராமவாசிகள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில் 5 வயதுடைய அந்த யானைக்கு வனத்துறை அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களும் சிகிச்சையளித்து வந்துள்ளனர். மேலும், அந்த யானையை கண்கானிக்க 2 பேர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காயங்கள் குணமாகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் 4 அன்று வனத்துறை அதிகாரிகள் அந்த யானைக்கு சிகிச்சையளித்து விட்டு திரும்பிய நிலையில், நேற்று (மார்ச் 5) உயிரிழந்த நிலையில் அந்த யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, யானையை யாரோ பிடிக்க முயன்றதினால்தான் அதற்கு காயங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்த முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.