சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

திருச்சி - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை துவக்கம்!

திருச்சி - யாழ்ப்பாணம் நேரடி விமான சேவை துவங்கப்படுவதைப் பற்றி...

கோப்புப் படம்

Updated On :

திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவை துவங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் திருச்சி மாவட்டத்திலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் வரை நேரடி விமான சேவை வருகின்ற மார்ச் 30 முதல் துவங்கப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த புதிய பாதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும், தென்னிந்தியாவிலிருந்து இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுப் சிறப்பு மிக்க இடங்களுக்கு வணிக மற்றும் சுற்றுலா ரீதியான பயணங்களை மேற்கொள்ள விரும்புவோருக்கு இது மிகவும் உதவியானதாகயிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகின்ற மார்ச். 30 முதல் துவங்கப்படும் இந்த தினசரி நேரடி விமான சேவைகளின் மூலம் இரு மாகாணங்களுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களில் வளர்ச்சி அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விமானப் பாதை குறித்து இண்டிகோ நிறுவனத்தின் உயர் அதிகாரி வினய் மல்ஹோத்ரா கூறுகையில், இந்த புதிய திட்டமானது சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயணங்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து செயல்முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது, இந்த விமான சேவையின் மூலம் இந்தியாவின் சென்னை,பெங்களூர், ஹைதரபாத், மும்பை மற்றும் திருச்சி போன்ற நகரங்களிலிருந்து இலங்கைக்கு வாரம் 60 விமானங்கள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.