
மத்திய கிழக்கு நாடான குவைத்தில் இன்று (மார்ச் 8) சில மணி நேரத்திற்கு விமான சேவை பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடான குவைத்தில், தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திருப்பப்பட்டதாகவும், அந்நாட்டிலிருந்தும் விமானங்கள் இயக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான கண்கானிப்பு தரவுகளின் படி குவைத் நாட்டில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் திருப்பப்பட்டு, அங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மகளிர் நாள்: கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்!
கடந்த சில நாள்களாக அந்நாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில், தொழில்நுட்பக் கோளாரினால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், சில மணி நேரம் கழித்து காலை 8 மணியளவில் (ஜி.எம்.டி.) விமான சேவை மீண்டும் துவங்கியது. மேலும், குவைத் நகரத்திலுள்ள சர்வதேச விமான நிலையம்தான் அந்நாட்டின் வான்வழி சேவைக்கு முக்கிய தளம் என்பது குறிப்பிடத்தக்கது.