அதிரடியாக குறைந்த தங்கம் விலை: எவ்வளவு குறைந்தது?
வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வந்த தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.


வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வந்த தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கும், மார்ச் 17 ஆம் தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 66,000-க்கு விற்பனையானது. புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ. 66,480 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குவது நடுத்தர மக்களிடையே கவலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,270-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலை நிலவரம்
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.112.10-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,12,100-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...