2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்: பினராயி விஜயன் பேச்சு

தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் சார்ந்தது அல்ல. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன்

Published On :

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் சார்ந்தது அல்ல. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் நியாயமற்ற முறையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில்,

தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் சார்ந்தது அல்ல. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம். பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை மத்திய அரசு தொடங்க வேண்டும். மேலும் தெளிவுபடுத்த வேண்டியது கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

தென்மாநிலங்களின் தொகுதி குறைப்பு பாஜகவின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும். ஏற்கனவே நம் கலாசாரத்திலும், நம் மொழிக் கொள்கையிலும் தலையிடும் மத்தியில் ஆளும் பாஜக அரசு தற்போது நம் பிரதிநிதித்துவத்திலும் தலையிடுகிறது. இதனை அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டியது மிக முக்கியம். இந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.