சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன்(76) உடல் நல குறைவால் புதன்கிழமை காலை காலமானார்.

கருப்பசாமி பாண்டியன்

Updated On :

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்த வி.கருப்பசாமி பாண்டியன்(76) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை காலமானார்.

அதிமுகவில் 1977 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பசாமி பாண்டியன், 1980 ஆம் ஆண்டு தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1996 இல் கருப்பசாமி பாண்டியனுக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

2000 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கருப்பசாமி பாண்டியன், 2006 பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2015 மே மாதம் திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கருப்பசாமி பாண்டியன், சிறிது காலம் அமைதியாக இருந்து வந்த நிலையில், 2016 ஜூலை 26 ஆம் தேதி ஜெயலலிதாவால் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2017 இல் அதிமுகவில் இருந்து விலகியவர், 2020 இல் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.