வாஷிங்டன் சுந்தர் அதிரடி: ஆஸியை வென்றது இந்தியா!

3வது டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி....
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் துவங்கியுள்ளன.

முதல் ஆட்டம் மழையால் ரத்தாக, இரண்டாம் ஆட்டத்தில் ஆஸி. வென்றது. இன்று மூன்றாம் ஆட்டம் நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த பேட்டிங் செய்த ஆஸி. அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தனர்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். அறிமுக ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கத்தைக் கொடுத்தாலும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடியவர்களும் 20-களில் ஆட்டமிழக்க ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், ஜித்தேஷ் ஷர்மா இணை அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளனர்.

இலக்கை 18.3 ஓவரில் எட்டியதுடன் வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமலும் இருந்தார். இந்த வெற்றி மூலம் 1 - 1 என்கிற அளவில் இரு அணிகளும் சமனில் இருக்கின்றன.

Summary

india won 3rd t20 match against australia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com