காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மழைக்காலத்தில் எஸ்ஐஆர் பணியை செய்ய வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்: கனிமொழி எம்.பி.

மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய பணிகளை விட்டுவிட்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) செய்ய வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்....

News image

திமுக எம்.பி. கனிமொழி

Updated On :29 நவம்பர் 2025, 3:02 pm IST

சென்னை: மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய பணிகளை விட்டுவிட்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) செய்ய வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது, இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. கூறியதாவது:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எஸ்ஐஆர் பிரச்னை எழுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலைக்கு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி வரவில்லை, இதே போல கல்விக்காக வரவேண்டிய பல கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதனை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும், அதற்காக ஒரு குழு வந்து பல ஆய்வுகளை செய்துவிட்டு சென்றுள்ளார்கள். ஆனால் தற்போதுவரை எந்த பதிலும் இல்லை.

மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டுக்கான முக்கியமான பல பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

மனிதாபிமானமே இல்லாமல் நடத்தக்கூடிய ஒரு திட்டமாக எஸ்ஐஆர் உள்ளது. பல மாநிலங்களில் பிஎல்ஒ-க்கள் மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம், தமிழ்நாட்டில் மிகக் குறுகிய அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாக தான் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழல் உள்ளதாக கனிமொழி தெரிவித்தார்.

மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எல்லா அதிகாரிகளும், மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான பணிகளை விட்டு விட்டு, எஸ்ஐஆர் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இது மக்கள் குறித்த அக்கறையே இல்லாமல் இந்த நேரத்தில் அதுவும் குறுகிய நேரத்தில் போதிய அவகாசம் இல்லாமல் அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது என்று கனிமொழி கூறினார்.

Summary

Officials are forced to do SIR work during the rainy season: Kanimozhi MP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.