

திருப்பனந்தாள் அருகே சிற்றடையா நல்லூர் பகுதிகளில் ஒரு வார காலமாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே சிற்றடையா நல்லூர் பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி, மாநகராட்சி அலுவலரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.