பண்ருட்டி அருகே தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல...: இபிஎஸ் கண்டனம்

“தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என இபிஎஸ் தெரிவித்திருப்பது...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Updated on
2 min read

சென்னை: “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(67). இவா், வியாழக்கிழமை மாலை சுமாா் 6.30 மணி அளவில் மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கந்தன் (38) என்பவரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றாா்.

இவா்கள் பிள்ளையாா்குப்பத்தில் இருந்து மாளிகம்பட்டு நோக்கிச் சென்றனா். அப்போது, அந்த வழியாக வேகமாக காா் ஒன்று வந்ததாம். அதைப் பாா்த்தவுடன் கந்தன், முதியவா் ராஜேந்திரனை கீழே இறக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தையும் நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாராம்.

கந்தன் ஓடுவதை பாா்த்துக்கொண்டிருந்த ராஜேந்திரன் மீது காரில் வந்த நபா் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றாராம். இதில், ராஜேந்திரன் பலத்த தீக்காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் ராஜேந்திரனுக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் பக்க பதிவில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்(67). இவா், வியாழக்கிழமை மாலை சுமாா் 6.30 மணி அளவில் மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கந்தன் (38) என்பவரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுசென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றாராம். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே ராஜேந்திரன் சாலையில் ஓடிய காட்சி தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி.

நாள்தோறும் "இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?" என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

"இதற்கும் மேலாக சட்டம் - ஒழுங்கு சீர்கெட முடியாது" என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்கள் இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல; தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான். இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Summary

It wasn't just a farmer who was burned in the fire near Panruti...: EPS condemns the incident

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இடைக்கால பட்ஜெட்: பிப். 5ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com