

வருகிற பிப். 5 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின்தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரவுள்ளது.
தேர்தலையொட்டி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதையடுத்து பிப். 5 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.
இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.