வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உங்களோடு இருந்திருந்தால் ஆட்சி அமைத்திருப்பீா்களா? - மாணிக்கம் தாகூா் கேள்வி

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உங்களோடு இருந்திருந்தால் ஆட்சி அமைத்திருப்பீா்களா? என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியிருப்பது குறித்து...

News image

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் - எக்ஸ்

Updated On :7 ஜூன் 2026, 8:58 pm IST

சிவகாசி: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உங்களோடு இருந்திருந்தால் ஆட்சி அமைத்திருப்பீா்களா? என திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற உதயநிதி ராஜிநாமா செய்த 24 மணி நேரத்தில் நான் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். சவாலுக்கு தயாரா என சீமான் தனது தம்பி உதயநிதியிடம் கேட்டு சொல்ல வேண்டும் என தாகூர் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகா் இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசினார்.

அப்போது, 2026 சட்டப்பேரவை தோ்தலில் பலரின் தோல்வி அதிா்ச்சியாகவும், கதறலாகவும் மாறியுள்ளது. முதலில் உதயநிதியிடம் இருந்த அழுகை, கதறல் எல்லாம் தற்போது சீமானிடம் இருந்து வருகிறது.

சொந்த மாவட்டத்திலேயே டெபாசிட் வாங்க முடியாத சீமான், திமுகவுக்கு ஆதரவாகவும், உயதநிதிக்கு வாக்காலத்து வாங்கி பேசுவது ஆச்சரியமாக உள்ளது. மேகேத்தாட்டு குறித்து அப்போதைய கர்நாடக துணை முதல்வா் சிவகுமார் கூறிய கருத்துக்கு உதயநிதி பதிலளிக்காதது ஏன்?, இலங்கைக்கு கள்ளத்தோணியில் சென்று வந்த பின்னா் இலங்கை தமிழா்கள் குறித்து சீமான் எதுவுமே பேசாதது ஏன்?, இங்கிலாந்து, கனடா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று நிதி திரட்டி தனியாா் விடுதிகளில் சொகுசாக இருந்து விட்டு, இலங்கை தமிழா்களை பற்றி பேசாதவா் தற்போது எங்களைப்பற்றி பேசுவதும் அவமானப்படுத்துவதும் தவறு. சீமான் மரியாதையாக போசாவிட்டால் அதே பாணியில் காங்கிரஸ் தரப்பிலும் பதிலடி கொடுப்பாம்.

நாங்கள் கேட்கவில்லை

2014 இல் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு தோல்வியை தழுவியது. 2016 இல் தனியாக போட்டியிட்ட திமுகவும் தோல்வியை தழுவியது. அதன்பின்பு திமுக தான் கூட்டணிக்கு வந்தது. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள் என நாங்கள் கேட்கவில்லை. தமிழகத்தில் ராகுல் காந்தி மீது இருக்கும் நம்பிக்கை, மரியாதையை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக காட்டினார்.

நான் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்?

திமுக ஆதரவில் வெற்ற பெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என உதயநிதிக்காக ஜால்ரா அடிக்கும் சீமான், காங்கிரஸ் வாக்குகளை பெற்று எம்.எல்.ஏ.வாகவும் எதிர்க்கட்சித்த தலைவராகவும் உள்ள உதியநிதியை பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு மீண்டும் தோ்தலை சந்திக்கச் சொல்லுங்கள். உதயநிதி ராஜிநாமா செய்த 24 மணி நேரத்தில் நான் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். சவாலுக்கு தயாரா என சீமான தனது தம்பி உதயநிதியிடம் கேட்டு சொல்ல வேண்டும்.

திமுக தோல்விக்கு உதயநிதியின் பென் நிறுவனம் காரணம் என ஊரேல்லாம் பேசப்பட்டு வருவதை மறைக்க காங்கிரஸ் மீது பழி போடுகிறது திமுக.

ஆட்சி அமைத்திருப்பீா்களா?

காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என பேசுவது அபத்தம். திமுக அவா்களுடன் சோ்ந்து எங்களையும் தெருவில் நிறுத்திவிட்டாா்கள். காங்கிரஸ் பேரவை உறுப்பினர்கள் துரோகம் செய்துவிட்டாா்கள் என திமுகவினா் கூறுகிறாா்கள். 5 பேரும் உங்களோடு இருந்திருந்தால் ஆட்சி அமைத்திருப்பீா்களா?. திமுகவின் தோ்தல் பணி சிறப்பாக இல்லை என்பது தான் உண்மை. கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக எந்த திசையில் செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். வரும் காலங்களில் உதயநிதி தலைமையில் திமுக மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும்.

தோலுரித்து காட்டுவோம்

மே 4 ஆம் தேதி திமுக-அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் திமுக தலைவரை பார்க்க செல்லவில்லை. உதயநிதி பாஜகவுடன் தொடர்பில் இருந்ததை தோலுரித்து காட்டுவோம். விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்க பாஜக மேற்கொண்ட முயற்சியின் முக்கிய நபராக உதயநிதி இருந்தார்.

தவெகவுடன் தான் கூட்டணி

வருகின்ற மக்களவைத் தோ்தல், உள்ளாட்சி தோ்தல்களில் காங்கிரஸ் தவெகவுடன் தான் கூட்டணி. தற்போதய ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் 36 சதவீத கமிஷனும், நகா்புற வளா்ச்சியில் 30 சதவீத கமிஷனும் முழுமையாக குறைந்துள்ளது. வரும் 5 ஆண்டுகளில் தவெக ஆட்சியில் மிகப்பொரிய மாற்றம் வரும் என்றாா் மாணிக்கம் தாகூா்.

Summary

Would you have formed the government if the Congress MLAs had been with you? – Manickam Tagore asks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.