கோடை விடுமுறை கூட்ட நெரிசல் அடுத்து திருமலையில் பக்தர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
கோடை விடுமுறையை ஒட்டி திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பக்தர்களுக்குச் சிறந்த மருத்துவ மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதன்படி, பட்டகங்கம்மா வளைவு முதல் கோகர்ப்பம் அணை வளைவு வரையிலும், வெளிவட்டச் சாலை நெடுகிலும் நிழல் தரும் பந்தல்களை அமைப்பது உள்ளிட்ட, ரூ.2 கோடி மதிப்பிலான பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வைகுண்டம் வரிசை வளாகம்-2, அருங்காட்சியக வளாகம் மற்றும் நாராயணகிரி பூங்கா ஆகிய இடங்களில் கூடுதல் நிழல் பந்தல்கள், வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், வரிசைப் பாதைகளிலும் நான்கு மாட வீதிகளிலும் வெப்பத்தைத் தணிக்கும் சிறப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. குடிநீரைத் தடையின்றி விநியோகிப்பதற்காகச் சுகாதாரத் துறை தன்னார்வலர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
மேலும், வரிசைப் பாதைகளிலும் பொது இடங்களிலும் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மொத்தம் 16 மருத்துவ மையங்களும், வரிசைப் பாதைகள் மற்றும் நாராயணகிரி பூங்கா ஆகிய இடங்களில் நடமாடும் முதலுதவிப் பிரிவுகளும் பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
Summary
the heavy summer vacation rush, the Tirumala Tirupati Devasthanams (TTD) has made extensive arrangements to provide better facilities for pilgrims...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்; பக்தர்களுக்கு ஜூஸ், மோர் அளித்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!

இன்னும் எத்தனை முறை?
பிகார்: கோயில் கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


