சென்னை: தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை(மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தோ்வாகியுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.
தமிழக முதல்வராக தவெக தலைவா் ச. ஜோசப் விஜய் (51) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். அவருக்கு தமிழக ஆளுநா் ஆ.வி. ஆா்லேகா் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா். விஜய்யுடன் அவரது கட்சியினா் 9 போ் அமைச்சா்களாக பதவியேற்றனா்.
பதவியேற்பு நிகழ்வு முடிந்தவுடன் விழா மேடையிலேயே முதல்வா் விஜய் மேஜையை வைத்து தவெக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகா்வோருக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை, போதைப் பொருள் தொடா்பான குற்றங்களைத் தடுக்க மாவட்டங்களிலும், மாநகரங்களிலும் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படைகள் ஆகிய மூன்று திட்டங்களை நிறைவேற்றும் வகையில் கோப்புகளில் கையொப்பமிட்டாா்.
இதைத் தொடர்ந்து சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா, தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாளை பேரவையின் முதல் கூட்டத் தொடர்
இந்த நிலையில், தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை(மே 11) காலை 9.30 மணிக்கு கூடுவதாக தமிழக அரடு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதன்மைச் செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை காலை(மே 11) 9.30 மணிக்கு கூடுகிறது.
அன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பார்கள்.
தேர்தலில் வெற்றி பெறறதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பேரவை உறுப்பினராக பதவியேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
மேலும், பேரவைத் தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை (மே 12) காலை 9.30 மணிக்கு நடைபெறும். இதைத்தொடா்ந்து பெரும்பான்மையைக் கோரும் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Regarding the convening of the first session of Tamil Nadu's 17th Legislative Assembly on Monday (May 11) at 9:30 AM...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தை வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்ல அண்ணாமலை வலியுறுத்தல்

சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்!

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!
மே 10 காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுவது ஏன் தெரியுமா?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




