கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

யானை அகிலாவுக்கு பிறந்தநாள்: இனிப்புகள், பழங்கள் வழங்கி ஆசி பெற்ற அமைச்சர்!

திருக்கோயில் யானை அகிலா பிறந்தநாளையொட்டி, அமைச்சர் சீ.ரமேஷ் யானைக்கு இனிப்புகள், பழங்கள், காய்கறிகளை வழங்கி ஆசி பெற்றது குறித்து...

Minister Offers Sweets and Fruits, Seeks Blessings

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் யானை அகிலாவுக்கு இனிப்புகள், பழங்கள், காய்கறிகளை வழங்கி ஆசி பெற்ற இந்து அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ். - டிஎன்எஸ்

Published On :24 மே 2026, 4:26 pm IST

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் யானை அகிலா பிறந்தநாளையொட்டி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் யானைக்கு இனிப்புகள், பழங்கள், காய்கறிகளை வழங்கி ஆசி பெற்றார்.

அமைச்சர் சீ.ரமேஷ் இன்று (மே 24) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு நேரில் சென்று நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள், பிரசாத விற்பனை நிலையம் ஆகியற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு சென்று திருக்கோயில் நிர்வாகம், யானை பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிரசாதங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா எனவும், உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாக எனவும் பரிசோதித்தார்.

யானை அகிலாவுக்கு இனிப்புகள், பழங்கள் வழங்கி ஆசி

பின்னர், திருக்கோயில் யானை அகிலாவுக்கு இன்று 24-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் முன்னிலையில் திருக்கோயில் யானை அகிலா தனது இருப்பிடத்திலிருந்து மேள, தாள முழக்கத்துடன் நந்தவனத்திற்கு அழைத்து வரப்பட்டு கஜ பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் திருக்கோயில் யானைக்கு இனிப்புகள், பழங்கள், காய்கறிகளை வழங்கி ஆசி பெற்றார்.

Summary

Elephant Akila's Birthday: Minister Offers Sweets and Fruits, Seeks Blessings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.