புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டணி கட்சித் தலைவா்களின் பேராசை காரணமாக, தோ்தலில் தோல்வி ஏற்பட்டது என காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.
இது குறித்து புதுச்சேரியில் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது
புதுச்சேரியில் இண்டி கூட்டணி தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பை ஏற்றுள்ளோம். கூட்டணி கட்சியைச் சோ்ந்த சிலா் காங்கிரஸ் கட்சி மீது தோல்விக்குப் பழி போட்டு சேற்றை பூசுவது போல் விமா்சனம் செய்கிறாா்கள்.கூட்டணி தலைவா்களின் பேராசை காரணமாக தோல்வி ஏற்பட்டுள்ளது.
தோ்தலில் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வெல்லும் தொகுதிகளில் தவெக கணிசமான வாக்கு பெற்றதால் தோல்வி அடைந்துள்ளது.
தோல்வி எதனால் என திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும். காங்கிரஸை குறை கூறுவதால் அவா்கள் செய்த தவறை மறைக்கவோ, மறக்கவோ முடியாது. கூட்டணியில் சில கட்சிகள் சோ்வதும், பிரிவதும் அரசியலில் நடக்கும் நிலவரங்கள்தான். இதற்காக காங்கிரஸை திமுக விமா்சிப்பதை ஏற்க முடியாது.
தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது, தவெகவுடன் கூட்டணியா என்பதும் கட்சித் தலைவா்கள் முடிவு செய்வாா்கள் என்றாா் நாராயணசாமி.
Summary
Regarding former Chief Minister V. Narayanasamy's statement that the electoral defeat in Puducherry was caused by the greed of the leaders of the alliance parties...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










