மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

விரைவில் வாங்க வேண்டிய பொருள்தான்.. இப்போது பார்த்துக் கொள்ளலாம்!

விரைவில் வாங்க வேண்டிய பொருள்தான் ஆனால், அதனை இப்போது பார்த்துக் கொள்ளலாம்!

காற்று சுத்திகரிப்பான்

காற்று சுத்திகரிப்பான்

Published On :

இப்போது சென்னையில் இல்லாவிட்டாலும் தில்லி போன்ற நகரங்களில் வாழ்பவர்கள் ஏற்கனவே வாங்கி வீட்டில் பயன்படுத்தி வரும் ஒரு பொருள். விரைவில் பிற பகுதிகளிலும் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

அதுதான் காற்று சுத்திகரிப்பான் எனப்படும் ஏர் பியூரிஃபையர்.

வழக்கமாக சென்னை போன்ற பகுதிகளில் இதன் தேவை அத்தியாவசியப் பட்டியலில் இல்லாவிட்டாலும், முக்கிய சாலைக்கு அருகே வாழ்பவர்கள், கட்டட வேலைகள் நடக்கும் இடத்துக்கு அருகே அல்லது தொழிற்சாலை அதிகம்கொண்ட பகுதிகளில் வாழ்பவர்கள் போன்றோர் வீட்டில் இதனை நிச்சயம் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

சரி, இதில் என்ன மாயாஜாலம் இருக்கிறது என்று கேட்டால், ஒரு அறையில் காற்று சுத்திகரிப்பான் வைக்க வேண்டும் என்றால் அது குறித்து பல்வேறு விவரங்கள் நாம் அலசி ஆராய வேண்டும்.

ஒரு அறையின் அளவுக்கு ஏற்ப, அந்த காற்று சுத்திகரிப்பானின் திறன் அமைய வேண்டும். ஒரு அறையின் அளவு, சப்தம், இயங்கும் நேரம் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ஒவ்வொரு காற்று சுத்திகரிப்பானும் இரவு முழுவதும் இயங்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது இயங்க வேண்டியது இருக்கும்.

காற்று சுத்திகரிப்பானில் உள்ள வடிகட்டி எந்த வகையானது என்பதையும் அதனை மாற்றி அமைத்துக் கொள்ளலாமா? புதிய வடிகட்டிகளை வாங்க வேண்டும் என்றால் அதன் விலை என்ன என்பதையும் ஆராய வேண்டியது உள்ளது.

சில காற்று சுத்திகரிப்பான்களில் கூடுதலாக சில அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். அவை வாங்குபவர்களுக்கு ஏற்றதாக இருக்குமா என்று பார்த்து வாங்கினால் பயனளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER