அழகு அழகு அத்தனை அழகு! பயனுள்ள 4 அழகுக் குறிப்புகள் உங்களுக்காக
பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க அதிகம் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களையே நாடுகிறார்கள்.

beauty

beauty
பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க அதிகம் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களையே நாடுகிறார்கள். ஆனால், இயற்கையான பொருட்களிலேயே அழகினைக் கூட்ட முடியும்.

அந்த வகையில் நெய் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகில் கூட பெரிதும் பயன்படுகின்றது. நெய்யைப் பயன்படுத்தி எளிய முறையில் சரும அழகினை மெருகூட்ட முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்:

சிறிதளவு நெய்யைச் சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். விரைவில் சருமம் உலர்வதை தடுத்து சரும வறட்சியை தடுக்கும் பாதுகாப்பான மருந்தாகும்.

5 மேசைக் கரண்டி நெய் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் 10 துளிகள் சேர்த்து உடலில் தடவி குளித்தால் மிகவும் மென்மையான தோலை பெறலாம்.

சிறிது நெய்யை எடுத்து கண்களை சுற்றி பூசுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண்கள் சோர்வடைவது குறையும்.

தினமும் படுக்கப் போவதற்கு முன்னால் சிறிதளவு நெய்யை உதட்டில் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
- கவிதாகணேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...