காலில் வெள்ளி கொலுசு அணிவதற்கு இத்தனை காரணமா?

நாட்டில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த வெள்ளி பொருள்களில் 34 சதவீதம் வெள்ளி கொலுசுகளாகத்தான் இருக்கின்றன.
காலில் வெள்ளி கொலுசு அணிவதற்கு இத்தனை காரணமா?
காலில் வெள்ளி கொலுசு அணிவதற்கு இத்தனை காரணமா?
Published on
Updated on
1 min read


நாட்டில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த வெள்ளி பொருள்களில் 34 சதவீதம் வெள்ளி கொலுசுகளாகத்தான் இருக்கும். உச்சி முதல் தங்க நகைகளை இழைத்து வைத்தாலும், காலில் பொதுவாக பெண்கள் தங்கத்தை அணிவதில்லை.

காலில் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி மெட்டியை அணிவதைத்தான் பெண்கள் பல காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

இவ்வாறு காலில் கொலுசு அணிவதன் பின்னணியில் என்னதான் கலாசாரம், பழக்க வழக்கங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்துக்கான காரணிகளும் அடங்கியுள்ளன.

ஒருவரது உடலிலிருந்து வெளியேறும் ஆற்றலை மீண்டும் கிரகித்துக் கொள்ளும் தன்மை வெள்ளிக்கு உள்ளது. பொதுவாக நமது உடலில் இருக்கும் ஆற்றலானது கை மற்றும் கால்கள் வழியாகவே வெளியேறும். அதனால்தான் கால்களில் வெள்ளி நகைகளை அணிகிறோம்.

பெண்கள் பல மணி நேரம் சமையலறையில் நின்று கொண்டு சமைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதால், கால்களில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. நெடு நேரம் நிற்பதால் ஏற்படும் வலியானது கீழ் முதுகுத் தண்டுவடத்தின் வழியாக கால்கள் முழுக்க பரவும்.

இதுபோன்ற சமயங்களில், கால்களில் வெள்ளி கொலுசு அணிவதன் மூலம், கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டதை அதிகரிப்பதோடு, நமது உடலின் அடிப்படை ஆதாரமாக இருக்கும் கால்கள் பலமிழந்துப் போவதிலிருந்து காத்து, பாதங்களை மேம்படுத்துகிறது.

இது மட்டுமல்ல, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் வெள்ளி அதிகரிக்கும், முக்கிய சுரப்பிகளை சமநிலையில் வைத்திருக்கவும், கருப்பையை ஆரோக்கியமாக பேணவும் வெள்ளி கொலுசு உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதனால்தான் இந்தியாவில் பெண்கள் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி மெட்டி போன்றவற்றை அணிகிறார்கள் என்பது புரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com