தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முகப்பேர் நீல்கிரீஸ் அருணா சூப் ஷாப்...

சூப்பில் தாராளமாக கார்ன் சிப்ஸ் தூவித் தருகிறார்கள். மிளகுத் தூளும், உப்பும் சரிநிகர் சமானமாக ஆட்சி செய்தது, சூப்பில் சூடும் பின் மாலை நேரத்துக்குப் பக்காவாக பொருந்தும் நிறை சூடு. ஆகையால் சொல்லத்தக்க

News image
Updated On :22 டிசம்பர் 2016, 12:53 pm

இரண்டு நாட்களுக்கு முன்பு முகப்பேர் நீல்கிரீஸ் முகப்பில் இருக்கும் அருணா சூப் ஷாப்பில் அருமையான மஷ்ரூம் சூப் சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பலமுறை பயணித்துக் கொண்டிருக்கும் சாலை தான். ஆனால் இதுவரை அங்கே சூப் சாப்பிட வேண்டும் என்று தோன்றியதில்லை. மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரத்தின் லேசான பசியுணர்வை வேறெதைக் கொண்டும் திருப்தி படுத்தி விட முடியாது எனத் தோன்றியதால், வீட்டிற்குப் போய் இரவு உணவைத் தொடங்குவதற்கு முன்பான ஸ்டார்ட்டராக இருக்கட்டும் என்று ஆளுக்கு ஒரு சூப் வாங்கிக் கொண்டு, இருவர் மட்டுமே அமர இடமிருந்த நீல்கிரீஸின் நீளமான படிகளில் உட்கார்ந்து  சாலையெங்கும் விரையும் வாகனங்களின் ‘ஒளியும், ஒலியும்’ ரசித்துக் கொண்டே ருசித்து சாப்பிடத் தொடங்கினோம்.  எனக்கு மஷ்ரூம் சூப், கணவருக்கு வாழைத்தண்டு சூப். இரண்டுமே அருமையான சுவை. சூப்பில் தாராளமாக கார்ன் சிப்ஸ் தூவித் தருகிறார்கள். மிளகுத் தூளும், உப்பும் சரிநிகர் சமானமாக ஆட்சி செய்தது, சூப்பில் சூடும் பின் மாலை நேரத்துக்குப் பக்காவாக பொருந்தும் நிறை சூடு. ஆகையால் சொல்லத்தக்க குறையொன்றுமில்லை. 

ஒரு சூப் விலை 20 ரூபாய்.  சூப் அளவும் நுகர்வோர் திருப்திக்கு ஏற்றவாறு நிறைவாகவே இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை ருசிக்க முயற்சித்துப் பாருங்கள்.

வெஜிடபிள் சூப்
டொமட்டோ சூப்
வாழைத்தண்டு சூப்
மஷ்ரூம் சூப்... 

உள்ளிட்ட 6 விதமான சூப்கள் அங்கே கிடைக்கின்றன.

கமிஷனர் ஜார்ஜ் வீடு நீல்கிரீஸ் எதிரில் இருப்பதால் கடமையுணர்வு மிக்க போக்குவரத்து காவலர்கள் பார்க்கிங்கில் தான் கொஞ்சம் கெடுபிடி காட்டுகிறார்கள். மற்றபடி சூப்புக்காக அந்தக் கெடுபிடியைத் தாங்குவதில் அப்படியொன்றும் சிரமமில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.