காலை உணவுக்கு ஏற்றது இட்லி மற்றும் சட்னிதான். தயாரிக்கவும் எளிது. ஆனால் எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாக வரும், சில நாட்கள் கல் போன்று சுவையற்று இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்யவேண்டும்?
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - 4 தம்ளர்
உளுந்து - 1 டம்ளர்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அரிசி இவற்றை மூன்று மணி நேரமாவது ஊற வைக்கவும். பிறகு உளுந்தை கழுவி, வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். மிக்ஸியில் அரைப்பதை விட கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும். அவ்வப்போது தண்ணீர் விடவும். அதிகம் தண்ணீர் விடவும் கூடாது. குறைவாகவும் தண்ணீர் விட கூடாது.

அதன் பிறகு கிரைண்டரில் அரிசியை கழுவி போடவும். அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைக்கவும். அரிசி ரவை பதத்தை விட சற்று மைய அரைப்பட வேண்டும். அரிசி அரைக்கும் போது அன்று வடித்த சாதத்தை கால் கப் சேர்த்து அரைத்தால் மிக மிருதுவான இட்லி கிடைக்கும். உளுந்து நன்கு மையாக அரைபட வேண்டும். மாவை வழித்தெடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக வரவேண்டும்.
இப்படி அரைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்தை ஒரு பாத்திரத்தில் வழித்தெடுத்து இரண்டு மாவைவும் கைகளால் நன்கு கலக்கவும் அதன் பின் வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி இரவு முழுவதும் புளிக்க விடவும். புளிக்க வைக்கும் மாவை கிளறி விட்டால் கல் போன்ற இட்லி தான் வரும். எனவே அதைத் தொடவேண்டாம்.

மறுநாள் மாவு சரியான பதத்தில் பொங்கியிருக்கும். அப்போதும் மாவை அதிகம் கிளறாமல் அப்படியே எடுத்து, இட்லித் தட்டுக்களில் மென்மையான வெள்ளைத் துணி போட்டு அதன் மீது ஊற்றவேண்டும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டை வைத்து மூடி வேக விடவும். அதிக குழிவாகவும் இல்லாமல் மேடாகவும் இல்லாமல் இட்லி ஊற்ற ஏதுவாக அமைக்க வேண்டும்.
இப்போது பூப் போன்ற சூப்பர் சாஃப்ட் இட்லி ரெடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழைகள், இளைஞா்கள், பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆதவ் அா்ஜுனா
நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? உருக்கமாக பதிவிட்ட மு. க. ஸ்டாலின்!

3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி! யார் தெரியுமா?

கூட்டணி கட்சிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! காங்கிரஸ் பங்கேற்குமா?
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


