இப்போ விடுமுறை காலம். வீட்டில் இருக்கும் குழந்தைகள் விதம் விதமாகச் சாப்பிட ஆசைப்படுவார்கள். அது சைவமோ, அசைவமோ உடலுக்கு ஆரோக்யமானதுங்கறதை விட நாக்குக்கு ருசியா இருக்கனும்ங்கறது தான் குழந்தைகள் பாலிஸி. அதை அம்மாக்கள் நிச்சயம் மறுக்க முடியாது. ஏன்னா, எல்லா நேரமும் சாப்பாட்டு விஷயத்துல கண்ட்ரோல் பண்ணிட்டே இருந்தா குழந்தைங்களுக்கும் அலுத்துரும், அம்மாக்களுக்கும் குழந்தைகளை நினைச்சு பாவமா ஆயிடும். அதனால அம்மாக்களோட ஆரோக்ய வளையங்கள் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் அடிக்கடி தளர்த்தப்படும். வாரம் ஒருமுறை நான்வெஜ்னு இருந்த மெனு மாற்றப்பட்டு லீவு நாட்களில் அது வாரம் இருமுறை அல்லது மூன்று முறையாகவும் ஆக்கப்படலாம். ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தினமும் கூட சாப்பிட அனுமதிக்கப்படலாம். அம்மாதிரியான நேரங்களில் குடலும், கல்லீரலும் ஓவர் டைம் வேலை செய்ய வேண்டியதா இருக்கும். அதனால அந்த ரெண்டு உறுப்புகளுக்கும் நன்மை செய்யக் கூடியதா ஒரு நச்சு நீக்கி ஜூஸ் ரெஸிப்பி பத்தி நாம தெரிஞ்சு வச்சிக்கிறது நல்லதில்லையா?