ஜூலை முதல் ஆகஸ்டு வரையிலான மழைக்காலத்துக்கு உகந்த ஒளஷதக் கஞ்சி ரெசிப்பி!

ஹலீமில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. அத்துடன் ஃபோலேட் சத்தும் நிறைந்திருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் நிச்சயம் இதை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
ஜூலை முதல் ஆகஸ்டு வரையிலான மழைக்காலத்துக்கு உகந்த ஒளஷதக் கஞ்சி ரெசிப்பி!

இதை மலையாளிகள் ‘ஒளஷத கஞ்சி’ என்றும் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் கேரளாவைப் பொருத்தவரை ஜூலை முதல் ஆகஸ்டு வரையிலான கனமழை மாதத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் உடல் வலுவூட்டக்கூடிய தெம்பையும் இந்தக் கஞ்சி அளிப்பதால் இதை அவர்கள் அவ்விதமாகக் குறிப்பிடுகிறார்கள். மழைக்காலங்களில் கேரள ஆயுர்வேதக் கடைகளை அணுகுவீர்களெனில் உங்களுக்கு மரபார்ந்த கர்கிடக கஞ்சி சமைக்கத் தேவையான அரிசி, பருப்பு, மூலிகைகள் உட்பட அனைத்துப் பொருட்களுமே மொத்தமாக பேக்கிங்காகவே கிடைத்து விடும். அப்படி இல்லாமல் ஃப்ரெஷ் ஆகப் பறித்த மூலிகை இலைகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட வாசனைப் பொருட்களைக் கொண்டு இதைத் தயாரித்தும் நீங்கள் சாப்பிடலாம். அது இன்னும் அருமையான ஃப்ளேவர் தருவதோடு கூடுதல் சுவையுடனும் இருக்கும். இந்தக் கஞ்சியைச் செய்து சாப்பிடும் ஆர்வம் இருப்பவர்கள் கொஞ்சமாகச் செய்து சாப்பிடாமல் முழுக்குடும்பத்துக்குமாகச் செய்து சாப்பிட்டால் நல்லது.

மழைக்காலத்தில் இந்தக் கஞ்சியை மதிய உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம். 

கஞ்சி 

தேவையான பொருட்கள்:

நவரா அரிசி : 1 1/2 கப்
பாசிப்பயறு: 1/2 கப்
ஹலீம் அல்லது கார்டன் கிரெஷ்: 1 டேபிள் ஸ்பூன்

சட்னிக்கு...

தேவையான பொருட்கள்: 

சின்ன வெங்காயம்: 4 முதல் 5
பச்சை மிளகாய் - 3
துருவிய தேங்காய்: 4 கைப்பிடி 
மஞ்சள் தூள்: 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள்: 1/4 டீஸ்பூன்

மேற்கண்ட பொருட்களை மிக்ஸியில் இட்டு நன்கு அரைத்து ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும்.

முதலில் 1 1/2 கப் நவரா அரிசியுடன் 1/2 கப் பாசிப்பயறையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஏனென்றால் நவரா அரிசியை வேக வைக்க நேரமாகலாம். எனவே சமைப்பதற்கு முன்பு ஊற வைப்பது முக்கியம். ஊறிய நவரா அரிசி, பாசிப்பயிறை குக்கரில் இட்டு 3 முதல் 4 கப் தண்ணீர் சேர்க்கவும், 1 அல்லது 1 1/2 டீஸ்பூன் ஹிமாலயன் சால்ட் சேர்க்கவும். பின்னர் ஊறவைத்த ஹலீமை தண்ணீர் வடித்து விட்டுச் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் ஏற்றவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை குறைத்து 10 நிமிடங்கள் வேக விட்டு பிறகு அடுப்பை அணைக்கவும். இப்போது குக்கரைத் திறந்து பார்த்தால் அரிசியும் பருப்பும் நன்கு வெந்திருக்கும். ஆனால் மேலாக சற்று தண்ணீர் மீந்திருக்கும். இப்போது அரைத்து வைத்த சட்னியை இதில் சேர்க்கலாம். சட்னி கஞ்சியுடன் நன்கு கலக்குமாறு கரண்டியால் கிளறி விட்டு கஞ்சி கெட்டிப்பட்டதும் அடுப்பை அணைத்து ஒரு ஆர்க் கறிவேப்பிலை கிள்ளி கஞ்சியில் சேர்க்கவும். கடைசியாக 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கஞ்சியைக் கிளறிவிடலாம். இதன் மேல் உங்களுக்குப் பிடித்த ஊறுகாய் சேர்த்துப் பரிமாறலாம், அருந்தலாம். மிக அருமையான கர்கடக கஞ்சி தயார். 

கர்கடகம் என்பது கேரளாவில் ஜூலை முதல் ஆகஸ்டு வரையிலான மழைக்காலப் பொழுதை குறிக்கும்.

ஹெல்த் பெனிஃபிட்ஸ் ஆஃப் கர்கடக கஞ்சி அல்லது ஒளஷதக் கஞ்சி!

நவரா அரிசியில் விட்டமின் பி சத்து நிறைந்திருக்கிறது. அத்துடன் புரதம், நார்ச்சத்து, மினரல் மற்றும் கூட்டு கார்ப்போஹைட்ரேட் சத்துக்களும் இதில் அதிகம். இதில் இருக்கும் விட்டமின் பி சத்து தான் சாப்பிடுபவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அரிசியை கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இந்த அரிசிக்கு கேன்சரைத் தடுக்கும் குணமும் உண்டு என்கிறார்கள், முக்கியமாக மார்பக கேன்சரைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பெண்கள் மிக முக்கியமாக இந்தக் கஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஹலீமில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. அத்துடன் ஃபோலேட் சத்தும் நிறைந்திருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் நிச்சயம் இதை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அத்துடன் இதில் டயட்ரி ஃபைபர், கால்சியம், விட்டமின் C, விட்டமின் E, புரதம் நிறைந்துள்ளதால் மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்தவும் இது உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com