தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஒதிஷா பூரி ஜகன்னாதருக்குப் பிடித்த ‘டங்கா தொராணி’ பானம் செய்து அருந்தலாமா?

கிட்டத்தட்ட நம்மூர் நீராகாரம் மாதிரி தான் இருக்கிறது. ஆனால், அதை அந்தப் பெயரில் கொடுத்தால் நம்மூர் இளசுகள் குடிப்பார்களா? வெறும் லெமன் ஜூஸையே நிம்பூ பானி என்று லேபிள் ஒட்டி விற்றால் தானே நமக்கெல்லாம்

News image
Updated On :26 ஜூன் 2019, 12:42 pm IST

இந்த ரெஸிப்பியின் இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா? இது ஒதிஷா பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் பிரசாதமாக வழங்கப்படுகிறதாம். ஜகன்னாதரே இதை அருந்த ஆவலுடன் இருக்கும் போது நமக்கெல்லாம் என்ன வந்தது? ஆரோக்யமான இந்த டங்கா தொராணியை போகிற போக்கில் செய்து குடித்து விட்டுப் போகலாம் தானே!

உடலுக்கு ஆரோக்யமானது என்று கொடுத்தால் குடிப்பதற்கென்ன? நல்லது சொன்னால் குடித்து அனுபவிக்க வேண்டும், ஆராயக் கூடாது.

பூரி ஜகன்னாதருக்கு பிரசாதமாக வழங்கப்படும் அரிசியை சாதமாக வடித்து ஒருநாள் முழுவதும் ஊற வைத்து அதிலிருந்து பெறப்படும் தண்ணீரில் இந்த பானம் தயாரிக்கப்படுவதால் இதை ஜகன்னாதரின் ஸ்பெஷல் பிரசாதமாக அங்கத்திய மக்கள் கருதுகின்றனர். 

அதனால் தான் இந்த மே மாதம் ஒதிஷா தேர்தல் நேரத்தில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், தான் மேற்கொண்ட ரத யாத்திரை பிரச்சாரத்தின் போது இதே டங்கா தொராணி பானத்தை மக்களுக்கு அருந்தக் கொடுத்து ஓட்டுக் கேட்டார்.

பலன்:

டங்கா தொராணி உடல் சூட்டைக் குறைப்பதுடன், வயிற்றைக் குளிர்வித்து வயிற்றுப் புண்கள் ஏதேனும் இருந்தாலும் அதைக் குணப்படுத்துகிறது. அது மட்டுமல்ல இதில் பழைய சோறும் சேர்க்கப்படுவதால் உடலுக்குத் தேவையான மினரல்களும் போதிய அளவில் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்: 

  • தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சாதம் - இரண்டு கைப்பிடி சாதம் + 2 கப் தண்ணீரில் முதல்நாள் இரவு முதலே ஊறி இருக்க வேண்டும்.
  • சிறு மண்பானை: 1
  • கறிவேப்பிலை: 1 ஆர்க்
  • ஸ்லைஸ் செய்யப்பட்ட எலுமிச்சை: ஒன்றரை பழம்
  • இஞ்சி மாங்காய்: 1 துண்டு (நசுக்கியது)
  • துளசி இலைகள்: 4 அல்லது 5
  • பச்சை மிளகாய்: 1 (நீளவாக்கில் நறுக்கியது)
  • எலுமிச்சை இலைகள்: 2 அல்லது 3
  • தயிர் அல்லது மோர்: 1 கப்
  • எலுமிச்சை சாறு : 2 ஸ்பூன் அல்லது சுவைக்கு ஏற்ப
  • உப்பு: தேவையான அளவு

தேவையான பொருட்கள்:

டங்கா தொராணி தயாரிக்க மண்பானை தான் பெஸ்ட். அதில் தான் அற்புதச் சுவையுடன் டங்கா தொராணி தயாரிக்க முடியும். எனவே முதலில் ஒரு மண்பாண்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மண்பாண்டத்தில் தயாரிக்கப்படும் போது மாத்திரமே டங்கா தொராணிக்கு பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் தயாராகும் டங்கா தொராணி பிரசாதத்தில் கிடைக்கும் அதே சுவை கிட்டுகிறது.

முதல்நாள் சமைத்த சாதத்தில் தண்ணிர் ஊற்றி வைத்தால் நம்மூரில் அது பழைய சாதம் தான் இல்லையா? ஆம், அந்தப் பழைய சாதத்தில் ஒரு கைப்பிடி அல்லது 1 ஸ்பூன் எடுத்து அது ஊறிக்கொண்டிருந்த தண்ணீரிலேயே 1 அல்லது இரண்டு டம்ளர்கள் கலந்து சாதத்துடன் நன்கு பிசையவும். பின்னர் பிசைந்து கெட்டிப்பட்டிருக்கும் தண்ணீரை அப்படியே மண்பாண்டத்தில் ஊற்றவும்.

சாதம் உதிரியாக இருக்கக் கூடாது. நன்கு பிசையப்படாத சாதத்தை வடிகட்டி விட்டு வெறும் கஞ்சிப் பதத்தில் இருக்கும் பழைய கஞ்சித் தண்ணீர் மட்டும் போதும். இப்போது இதனுடன் ஒரு ஆர்க் கறிவேப்பிலை,  நசுக்கிய இஞ்சி மாங்காய் ஒரு துண்டு, நான்கைந்து துளசி இலைகள், நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, ஒன்றிரண்டு எலுமிச்சை இலைகள் மற்றும் ஒரு கப் தயிர் அல்லது மோர் கலந்து நன்கு அடித்துக் கலக்கவும். பின்னர் ஒரு சொட்டு நீரை நாக்கில் விட்டுப் பார்த்து புளிப்பு போதவில்லை என்றால் மேலும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மீண்டும் கலக்கவும்.

பின் அந்தக் கலவையை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு அப்படியே அசையாமல் ஓரிடத்தில் வைத்திருக்கவும்.

பின்னர் வெளியில் எடுத்து நறுக்கி ஸ்லைஸ் செய்யப்பட்ட ஒன்றரை எலுமிச்சம்பழங்களையும், துளசி இலைகளையும், பச்சை மிளகாயையும் போட்டு மீண்டும் கலந்தால் ஒரு சூப்பரான மணம் நாசியை நெருடும் பாருங்கள். நல்ல வெயில் நேரத்தில் இந்த பானத்தைக் குடித்தீர்கள் என்றால் பிறகு ஆயுளுக்கும் மறக்க மாட்டீர்கள். அப்படி ஒரு அருமையான சுவையுடன் வயிற்றைக் குளிர்விக்கும் பானம் இது.

கிட்டத்தட்ட நம்மூர் நீராகாரம் மாதிரி தான் இருக்கிறது. ஆனால், அதை அந்தப் பெயரில் கொடுத்தால் நம்மூர் இளசுகள் குடிப்பார்களா? வெறும் லெமன் ஜூஸையே நிம்பூ பானி என்று லேபிள் ஒட்டி விற்றால் தானே நமக்கெல்லாம் குடிக்கத் தோன்றுகிறது. அப்படித்தான் இதுவும்.

Related Article

அல்லேலூயா உணவகம் ‘அக்கா கடை’யைப் பத்தி பிரமாதமா பேசிக்கிறாங்களே! நீங்க சாப்பிட்டிருக்கீங்களா?

குடம்புளியில் செய்ததாக்கும்... குடிச்சுப் பாருங்க செம கூல் மராட்டி ஸ்பெஷல் சம்மர் ட்ரிங்க்!

வடநாட்ல இதை லஞ்ச்னு சொல்லிக்கிறாங்க, நமக்கெல்லாம் இது வெறும் ஸ்னாக்ஸ் மட்டும் தான்!

நாட்டுப்புறத்து ஸ்டைலில் வித்யாசமாய் ஒரு முருங்கைக்காய் ரெஸிப்பி!

பால்கோவாவும், தூத்பேடாவும் ஒன்றா?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.