அடுத்ததாக ஐஸ்வர்யா என்ன செய்யப் போகிறார்?

சரி இப்போது ஐஸ்வர்யா அடுத்து என்ன செய்யப் போகிறார்? குடும்பத்தினர் மனம் கோணாத படியான கதாபாத்திரஙளைத் தேர்ந்தெடுத்து நடிப்பாரா? அல்லது இதெல்லாம் கலை உலகப் பயணத்தில் சகஜம் என்று புறக்கணித்து விடுவாரா?
அடுத்ததாக ஐஸ்வர்யா என்ன செய்யப் போகிறார்?
Published on
Updated on
1 min read

கரன் ஜோகரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இந்தித் திரைப்படம் ’ஏ தில் ஹை முஷ்கில்’ முக்கோண உறவுச் சிக்கலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்தப் படத்தின் கதைக்கேற்ப ஐஸ்வர்யா ரன்பீருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா அப்படி நடித்ததில் அவரது குடும்பத்தினருக்கு விருப்பமில்லை எனவும், அதனால் தான் கரன் அமிதாப்புக்காக ஏற்பாடு செய்த ஸ்பெஷல் ஷோ வைக் கூட அமிதாப்பும், அவரது மனைவி ஜெயபாதுரியும் பார்க்க மறுத்து விட்டதாக பாலிவுட்டில் செய்திகள் உலவுகின்றன. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் கணவரும் பாலிவுட் ஹீரோவுமான அபிஷேக் பச்சனுக்கும் தன் மனைவி இப்படி நடித்ததில் மனக்கசப்பு என்றும்; அதனால் தான் அபிஷேக் ஐஸ்வர்யாவை விட கடந்த சில வருடங்களாக தான் தத்தெடுத்துக் கொண்ட கால்பந்து விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் எனவும் கூறப்படுகிறது.

இப்போது ஐஸ்வர்யா என்ன செய்யப் போகிறார்?

திருமணத்திற்குப் பிறகு ஹீரோக்களுக்கு எப்போதுமே இப்படியான சங்கடங்கள் வருவதே இல்லை. அப்படியே மனைவியோ, வாரிசுகளோ விருப்பமின்மையைக் காட்டினாலும் ஹீரோ நடிகர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை, ஆனால் அந்த ஹீரோக்களின் மனைவிகளும் நடிகைகள் என்று வரும் போது தான் சிக்கல் தொடங்குகிறது. இப்போது கணவர், அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, தனது குழந்தைகளின் எதிர்கால உளவியலையும் மனதில் வைத்து அவர்கள் தங்களது திரையுலக வாழ்வை யோசிக்க வேண்டியதாகி விடுகிறது. இது தான் திருமணமாகி குழந்தை பெற்ற நடிகைகளின் நிலை. சரி இப்போது ஐஸ்வர்யா அடுத்து என்ன செய்யப் போகிறார்? குடும்பத்தினர் மனம் கோணாத படியான கதாபாத்திரஙளைத் தேர்ந்தெடுத்து நடிப்பாரா? அல்லது இதெல்லாம் கலை உலகப் பயணத்தில் சகஜம் என்று புறக்கணித்து விடுவாரா? பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com