தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போலி கையொப்பத்தை கண்டுபிடிக்கும் செயலி!

இந்தச் செயலியை எந்த ஒரு ஸ்மார்ட் வாட்சிலும் பதிவேற்றம் செய்துவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கையொப்பத்தை இட்டால் போதும்.

News image
Updated On :9 பிப்ரவரி 2017, 12:25 pm

அ. சர்ஃப்ராஸ்

இன்று  உலகம் முழுவதும் உள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களின் கையொப்பத்தை வைத்துதான் பணப் பரிமாற்றம் செய்கின்றன.

தற்போது இந்த கையொப்பம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. டிஜிட்டல் பென், டேப்லட்டுகளில் கையொப்பமிட்டு அதனை வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட கையொப்பத்தை சரியானதா அல்லது போலியானதா என்று கண்டுபிடிக்க முடியாத நிலைதான் உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சரியான கையொப்பத்தை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் வாட்ச் செயலியை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் செயலியை எந்த ஒரு ஸ்மார்ட் வாட்சிலும் பதிவேற்றம் செய்துவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கையொப்பத்தை இட்டால் போதும். நாம் கையொப்பமிடும் காலஅளவு, அதன் நுணுக்கங்கள் அடங்கிய தகவல்களை ஸ்மார்ட் வாட்சில் உள்ள அசலேரோ மீட்டர் துல்லியமாகக் கணித்து தகவல்களைச் சேகரித்து வைத்துவிடும்.

பிறகு அதேபோன்ற கையொப்பத்தை ஸ்மார்ட் வாட்சிடம் காட்டினால், அந்த கையொப்பத்தை ஸ்கேன் செய்து பார்த்து, ஸ்மார்ட் வாட்சினுள் பொதிந்துள்ள தகவல்களுடன் ஒப்புநோக்கி, அந்தக் கையெழுத்து உண்மையானதா? போலியானதா? என்று கண்டுபிடித்துவிடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.