இதென்ன குழந்தைத் திருமணமா? சரியாக மாலை மாற்றக்கூடத் தெரியவில்லையே மாப்பிள்ளைக்கு!

திருமணமென்றாலே அதில் பல்வேறு கலாட்டாக்கள் அரங்கேறும். அதில் சில சிரிப்பு மூட்டக்கூடியவை, சில எரிச்சலூட்டக்கூடியவை,
இதென்ன குழந்தைத் திருமணமா? சரியாக மாலை மாற்றக்கூடத் தெரியவில்லையே மாப்பிள்ளைக்கு!
Updated on
1 min read

திருமணமென்றாலே அதில் பல்வேறு கலாட்டாக்கள் அரங்கேறும். அதில் சில சிரிப்பு மூட்டக்கூடியவை, சில எரிச்சலூட்டக்கூடியவை, இன்னும் சில அசூயையாக முகம் சுளிக்க வைக்கக் கூடியவையாக இருக்கும். திருமணத்தில் மணமக்கள் ஒரு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள், பார்வையாளர்களும், உறவினர்களுமாகிய நாம் கும்பல் கும்பலாக உட்கார்ந்து கொண்டு யாரையாவது கலாய்த்துக் கொண்டிருப்போம், நமக்கே தெரியாமல் நம்மையும் யாராவது கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். ஆசை தீர ஊர் பொறணி, உலகப் பொறணி எல்லாம் பேசித்தீர்ப்போம். இதில் வித்யாசமாகத் திருமணம் செய்து கொள்கிறோம் என்ற பெயரில் மணமக்கள் ஏதாவது ஏடாகூடம் செய்து வைத்தால் அதை அங்கே அவர்கள் முன்னிலையில் ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து விட்டு அவர்கள் தலை மறைந்ததும் ஏளனமாகச் சிரித்து அதைப் பற்றி மணிக்கணக்கில் பகடி செய்து வயிறு வலிக்கச் சிரிப்போம். இதற்கொரு உதாரணம், கடந்த வாரத்தில் பெங்களூரைச் சேர்ந்த மணமகன் ஒருவர் திருமணம் முடிந்ததும் மனைவியைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லவும், திருமண ஊர்வலத்திற்கும் ஜேசிபி வாகனத்தைப் பயன்படுத்தி பெரும் பரபரப்பைக் கிளப்பினார். புதுமையாக இருந்தாலும் பார்ப்பவர்கள் முதலில் சிரித்திருப்பார்கள் என்பதே நிஜம். அந்த வகையில் இதோ இந்தத் திருமண வீடியோவைப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு சிரிப்பு வரும்.

மாலை மாற்றச் சொன்னால், இந்த மாப்பிள்ளை பொருட்காட்சியில் எந்தப் பொருள் மேலே ரிங் விழுந்தாலும் அந்தப் பொருள் உங்களுக்கே என்று சொல்லி வளையம் வீசச் சொல்லி விற்பனை தந்திரம் செய்வார்களே, அது போல, மணமகள் கழுத்தில் மாலையைப் போடாமல், பொருட்காட்சியில் பொருட்களின் மீது வளையத்தை வீசுவது போல வீசிப் போட மாலை கழுத்தில் விழுவதற்குப் பதில் இடுப்பு வரை நழுவிச் சென்று விடுகிறது. இந்தக் காட்சி பார்ப்பதற்கு படு வேடிக்கையாக இருக்கிறது! 5 நிமிட அதிசய வீடியோக்கள் என்ற பெயரில் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த வீடியோ தான் இந்த வார வைரல் வீடியோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com