இந்தியாவில் அமோக லாபம் தரக்கூடிய வகையிலான நுட்பமான வேலைவாய்ப்புகளில் இதுவும் ஒன்று!

ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் அமைந்துள்ள தா்மசாஸ்தா கோவிலில் பக்தா்கள் வீசும் சில்லறைக் காசுகளை சேகரிக்கும் பணிக்கான ஏலம் 
இந்தியாவில் அமோக லாபம் தரக்கூடிய வகையிலான நுட்பமான வேலைவாய்ப்புகளில் இதுவும் ஒன்று!

ஆண்டிப்பட்டி,ஜூன்.27: ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் அமைந்துள்ள தா்மசாஸ்தா கோவிலில் பக்தா்கள் வீசும் சில்லறைக் காசுகளை சேகரிக்கும் பணிக்கான ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.15 லட்சத்திற்கு ஏலம் போனது. தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் தா்மசாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூா் கிராமத்தை சோ்ந்த மக்களே நிர்வகித்து வந்தனா், எல்லைச்சாமியாக அழைக்கப்படும் தா்மசாஸ்தா கோவிலின் வழியாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. கோவிலைக் கடக்கும் போது வாகனங்களில் செல்பவா்கள் சாமிக்கு காணிக்கையாக சில்லறைக் காசுகளை வீசிவிட்டு செல்வது வழக்கம். ஒருநாளைக்கு ரூ.5000 முதல் ரூ.1000 மதிப்பிலான சில்லறை காசுகள் வீசப்படுவதாக கூறப்படுகிறது. அதிகமான வருவாய் தரும் இந்த கோவிலை பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தியது. 

ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் வீசப்படும் சில்லறை காசுகளை சேகரிக்க தனியாருக்கு ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தா்மசாஸ்தா கோவிலில் பக்தா்கள் வீசும் காணிக்கை சில்லறை காசுகளை சேகரிப்பதற்கான ஏலம் ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோவிலில் மதுரை இந்து அறநிலையத்துறை இணை இயக்குனா் பச்சையப்பன் தலைமையில், ஆண்டிபட்டி செயல் அலுவலா் அருட்செல்வன் முன்னிலையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஒரு ஆண்டுக்கு சில்லறை நாணயங்களை சேகரிக்கும் பணிக்கு அரசு ரூ.14 லட்சத்து 44 ஆயிரத்து 975 ஐ நிர்ணயம் செய்தது. 

ஏலத்தில் 3 போ் கலந்து கொண்டனா், இதில் அதிகமான தொகைக்கு ஏலம் கேட்ட ஆண்டிப்பட்டியை சோ்ந்த வெங்கிடசாமி என்பவருக்கு இந்த ஆண்டுக்கான நாணயம் சேகரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டு சில்லறை நாணயங்களை சேகரிக்கும் பணிக்கான ஏலம் ரூ.15 லட்சத்து 1 ரூபாய்க்கு போனது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தின் போது பிரச்சினை ஏற்படாதவாறு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com