பலர் ஏராளமாய் புத்தகங்களை வாங்கி வைத்திருப்பர். ஆனால் படிக்க ஆர்வமோ, நேரமோ இருக்காது. அத்துடன் அவர்கள் அந்த புத்தகங்களை தாறுமாறாகப் போட்டு வைத்திருப்பர். இத்தகையவர்களை ஜப்பானிய மொழியில் டிசன்டோகு (TSUNDOKU) என அழைப்பர். நீங்களும் ஒரு டிசன்டோகுவா?
- ராஜிராதா
**
மகாத்மா காந்தியின் பெருமை!
மகாத்மா காந்தி இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நன்கு அறிந்த தலைவர். இதனால் அவர் மீது அன்பும் மதிப்பும் கொண்ட 128 நாடுகள் அவரை கௌரவித்து தபால் தலைகளை வெளியிட்டுள்ளன. இவற்றில் ரஷ்யா. அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளும் அடக்கம்.
**
ஷார்ன் வார்னேயின் சுயசரிதை!
ஆஸ்திரேலியாவின் முன்னாள் சூழற் பந்து வீச்சாளர் ஷான்வார்னே, ‘NO SPIN'
என்ற பெயரில் புதிய புத்தகம் எழுதி அக்டோபரில் வெளியிடுகிறார். இது தனது சுயசரிதம் என்று கூறும் அவர், "என்னைப் பற்றிய புரளிகளுக்கும் புளுகுகளுக்கும் இது பதில் சொல்லும்'' என்கிறார். பிரபல காமெண்டேடர் மார்க் நிகோலஸýடன் இணைந்து இந்த புத்தகத்தை எழுதி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.