ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

மழைக்காலத்தில் இதையெல்லாம் செய்யாதீர்கள் பெண்களே!

மழைக்காலங்களில் பலவித தொற்றுநோய்கள் வந்து நம்மை பாடாய்ப்படுத்தும். பிடித்த உணவுகளை சாப்பிட்டாலும்

Published On :7 பிப்ரவரி 2024, 3:35 pm IST

மழைக்காலங்களில் பலவித தொற்றுநோய்கள் வந்து நம்மை பாடாய்ப்படுத்தும். பிடித்த உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாமல் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். சளி, இருமல், காய்ச்சல் இவற்றில் இருந்தெல்லாம் நாம் மழைக்காலத்தில் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் பெரும்பாலோரை பாதிப்பது சிறுநீர் தொற்று. இது, ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகளை அணியும்போது, சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர் தொற்று குறித்து முக்கிய விஷயங்கள் இதோ:

5 பெண்களில் ஒருவருக்கு சிறுநீர் தொற்று ஒருமுறையாவது அவருடைய வாழ்நாளில் ஏற்படும்.

குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படாமல் பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாமை, அசுத்தமான நீச்சல் குளத்தில் குளித்தல் உள்ளிட்டவை சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Story image

ஜீன்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை அணிந்தாலும் மழைக்காலத்தில் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இறுக்கமான உடைகள் அணியும்போது காற்று உட்புகாமல், பாக்டீரியா தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, கல்லூரி செல்லும் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும் பெண்களுக்கும் சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், அவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

நைலான் துணியாலான உள்ளாடைகளை தவிர்ப்பது நலம். திரவ உணவுகளை மழைக்காலங்களில் எடுத்துக் கொள்வதன் மூலமும், காய்கறிகள், பழங்களை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்வதன் மூலமும் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.

நறுமணம் ஊட்டப்பட்ட சோப்புகள் உள்ளிட்டவற்றை பெண்கள் தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் அவை சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.
- பா.கவிதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.