பணியாற்றும் இடத்தில் உற்சாகமாக இருக்க சில டிப்ஸ்!
பணியாற்றும் இடத்தில் இருக்கும் சுற்றுச்சூழல், வசதி வாய்ப்புகள், உணர்வுப்பூர்வமான விஷயங்கள் அனைத்துமே ஒருவருக்குப் பிடித்தமான


பணியாற்றும் இடத்தில் இருக்கும் சுற்றுச்சூழல், வசதி வாய்ப்புகள், உணர்வுப்பூர்வமான விஷயங்கள் அனைத்துமே ஒருவருக்குப் பிடித்தமான வகையில் அமைந்தால், நிச்சயம் அவரது உற்பத்தி மற்றும் பணித்திறன் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், அனைத்து பணியிடங்களும் அப்படி இருக்கிறதா?
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருப்பது என்னவென்றால், 87 சதவீத பணியாளர்கள், தங்களது பணியில் முழு மனதோடு ஈடுபடுவதில்லை அல்லது உற்சாகமான ஈடுபாட்டை வெளிப்படுத்துவதில்லை என்று காட்டுகிறது. அதாவது, பணியிடங்களில், பெரும்பாலான பணியாளர்கள் உணர்வுப்பூர்வமாக பணியாற்றுவதில்லை, இதனால் மறைமுகமாகவும் நேரடியாகவும் உற்பத்தி மற்றும் பணித்திறன் பாதிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.
இதனை மாற்ற சில டிப்ஸ்..
தேவையான போது தளர்வாக இருங்கள். எப்போதும் உங்கள் பாதங்களை தரையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைப்படும் போது உங்களை தளர்வாக வைத்துக் கொள்ளலாம்.
எப்போதும் ஏதோ சிந்தனையோடு பணியாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், அதனை விடுத்து சில சமயங்களில் அருகில் பணியாற்றுபவர்களிடம் பேசி கருத்துகளை பரிமாறியபடி பணியாற்றலாம்.
இயற்கையான காற்று அல்லது வெளிச்சம் அல்லது இரண்டுமே கிடைக்கும் இடத்தில் உங்கள் பணியிடத்தை மாற்றிக் கொள்ளலாம். அல்லது அவ்வப்போது இவ்விரண்டையும் பார்த்துவிட்டு, சுவாசித்துவிட்டு வரலாம்.
பணியாற்றும் இடங்களிலேயே இணையதளமோ, செல்போனோ இல்லாத இடங்களை உருவாக்கி, அங்கு ஊழியர்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவ வாய்ப்பை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்திக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...