காய் : புடலங்காய் பசுங்கலவை
சத்துக்கள் : புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தீர்வு
தேவையான பொருட்கள் : புடலங்காய்த் தோல் விதையுடன் (200 கிராம்), கேரட் (100 கிராம்), மோர் (300 மி.லி), மிளகுத் தோல் (10 கிராம்), தக்காளி (3), கொத்தமல்லித் தழை (தேவையான அளவு), உப்பு (தேவைக்கேற்ப)
செய்முறை : புடலங்காய், கேரட், தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றை சிறிது சிறிதாக அரிந்து அதனை மோருடன் நன்றாக கலந்து மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி தினமும் இரவு வேளை உணவாக சாப்பிட்டு வரவும். இந்தப் புடலங்காய் பசுங்கலவை இருதய நோய் உள்ளவர்களுக்கும் மிகச் சிறந்தது. (பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுக்கலாம்)
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக விஜய்க்கு வாழ்த்து, திமுக ஸ்டாலினுக்கு நன்றி : சத்யராஜ்

விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?

இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!
விஜய் வெற்றியைக் கொண்டாடிய கேரள ரசிகர்கள்!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


