/
- இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்துடன் இரண்டு வெண்டைக் காய்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொண்டு அரைத்தால் இட்லி மல்லிகைப் பூ போன்று வெண்மையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
- எந்த வகை உப்புமா செய்தாலும் அத்துடன் அரைக்கீரையைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். உப்புமா சுவையும், சத்தும் கூடும்.
- உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, அதில் 3 தேக்கரண்டி கார்ன்ஃபிளார் மாவு சேர்த்து கலந்து, வடை தட்டினால் வடையின் ருசி சூப்பராக இருக்கும். இந்த வடையுடன் தேங்காய்ச் சட்னி வைத்து சாப்பிட்டால் மிக சூப்பராக இருக்கும்.
- எந்த பாயசம் செய்தாலும், மூன்று மஞ்சள் வாழைப் பழங்களை பிசைந்து சேர்த்துக் கொண்டால், பாயசம் மிகவும் ருசியாக இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும்.
- வெஜிடபிள் ரைஸ் செய்யும் போது 25 கிராம் பன்னீரை நடுத்தர அளவு துண்டுகளாக சேர்த்துக் கொள்ளவும், வெஜிடபிள் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். வெஜிடபிள் ரைஸ் விரும்பாத குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடும்.
(பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் நூலிலிருந்து உ.ராமநாதன், நாகர்கோவில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



