/
- கொஞ்சம் வசம்பை ரவா, மைதா உள்ள டப்பாவில் தட்டிப் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் வராது.
- இஞ்சியின் தோலைச் சீவி விட்டு, அலசி சுத்தம் செய்துவிட்டு தயிரில் போட்டால் தயிர் நீண்ட நேரம் புளிக்கவே புளிக்காது.
- காய்ந்த மிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
- பச்சை மிளகாயை காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும்.
- தோசை சுடும் போது தோசைக் கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
- தேங்காயை உடைத்தவுடன் கழுவிவிட்டு பின் பிரிட்ஜில் வைத்தால் அதில் பிசுபிசுப்பு ஏற்படாது.
- சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.

- கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸ் தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம்.
- ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.
- அடைக்கு ஊற வைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊற வைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.
- சரோஜா சண்முகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 6 - நேரலை!

தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!

கிராம வாழ்க்கைக்குத் திரும்பும் விஜய் ஆண்டனி!

சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸை விமர்சிப்பதா? - மு.க. ஸ்டாலினுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


