ஸ்டார் ஹோட்டல்ல தங்கனும், ஆனா, ஃபுட் பில்ஸ்ல இருந்து எஸ்கேப் ஆகனும் எப்படி?

ஸ்டார் ஹோட்டல் தங்கும் செலவையும் மீறி சர சரவென மீட்டரை ஏற்றி விடக்கூடிய சாப்பாட்டுச் செலவுகளாவது மிஞ்சும்,
stay in star hotel without food expense
stay in star hotel without food expense
Published on
Updated on
2 min read

வேற எப்படி? அங்க இருக்கற கெட்டிலை பயன்படுத்தித்தான்.

வெந்நீர் சுட வைக்க மட்டுமா கெட்டில்? அஞ்சே நிமிஷத்துல இன்னும் சில சூப்பர் டிஷ் எல்லாம் செய்யலாமே அதை வைத்து!

வீட்டில் வெந்நீர் சுட வைக்கும் கெட்டில் இருக்கிறதா? அட வீட்டில் வெந்நீர் சுட வைக்க கெட்டில் எதற்கு? பாத்திரம் போதுமே என்கிறீர்களா? சரி விடுங்கள், நீங்கள் வேலை நிமித்தம் ஏதோ ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்க வேண்டியதாகிறது. இப்போதெல்லாம் 2 ஸ்டார், 3 ஸ்டார், 4 ஸ்டார், 5 ஸ்டார் ஹோட்டல்களில் நீங்களே காஃபி, டீ தயாரித்துக் கொள்ள அறைகளுக்குள் மின் வசதியுடன் கூடிய கெட்டில் வைத்திருக்கிறார்கள் இல்லையா? அந்தக் கெட்டிலில் நிச்சயமாக அவர்கள் அளித்திருக்கும் இத்தனூண்டு காபித்தூள், மில்க் பெளடர், சர்க்கரை சாஷேக்களைக் கொண்டு சூப்பர் காபி, டீக்களை எல்லாம் தயாரிக்கவே முடியாது. அதில் நீங்களாக முயன்று  ‘உவ்வேக்’ ரகத்தில் காபியோ, டீயோ, கஷாயமோ தயாரித்துக் குடிப்பதற்குப் பதில் பேசாமல் இப்படிச் செய்து பாருங்கள். 

ஸ்டார் ஹோட்டல் தங்கும் செலவையும் மீறி சர சரவென மீட்டரை ஏற்றி விடக்கூடிய சாப்பாட்டுச் செலவுகளாவது மிஞ்சும்,

அதற்கு நாம் செய்ய வேண்டியது;

கெட்டிலில் முட்டை வேக வைக்கலாம்..
கெட்டிலில் முட்டை வேக வைக்கலாம்..

வீட்டிலிருந்து இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பாக்கெட்டுகள், உடைந்து போகாத பெட்டிகளில் முட்டைகள், ஒரு டப்பாவில் சத்துமாவு அல்லது ஓட்ஸ், பிறகு டிராவல் பேக்கில் வைத்து நன்றாக பேக் செய்யப்பட்ட பழங்கள், நட்ஸ் வகைகள் என்று எடுத்துக் கொண்டு சென்றீர்களென்றால், அதைக் கொண்டு சிம்பிளாக காலை டிஃபனே முடித்து விடலாம் பாருங்கள். 

கெட்டிலில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சமைக்கலாம்..
கெட்டிலில் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சமைக்கலாம்..

ஸ்டார் ஹோட்டல்களில் பெரும்பாலும் காலை உணவு காம்ப்ளிமெண்ட்ரியாக இருக்கும். அதாவது 24 மணி நேர பேக்கேஜாகப் பதிவு செய்தால் மட்டும். சில மணி நேரங்களுக்கு மட்டும் தங்குவதென்றால் உணவு காசு கொடுத்தால் தான் கிடைக்கும். அப்படியான நேரங்களில் இந்த உத்தி உங்களுக்குக் கைகொடுக்கலாம்.

பழங்கள் மற்றும் கொட்டை வகைகளைப் பேக் செய்து எடுத்துச் செல்லலாம்..
பழங்கள் மற்றும் கொட்டை வகைகளைப் பேக் செய்து எடுத்துச் செல்லலாம்..


 
எனவே இனிமேல் வேலை நிமித்தம் ஸ்டார் ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால், சாப்பாட்டுக்காக அதிகச் செலவு செய்து விட்டோமே என்று வருந்தாமல் இருக்க வேண்டுமென்றால் இப்படியெல்லாம் கொஞ்சம் மாற்றி யோசித்து அங்கிருக்கும் உபகரணங்களை உங்களுக்கு வசதியாகப் பயன்படுத்தப் பாருங்களேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com