மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாரசிட்டமாலை விட மிகச்சிறந்த வலிநிவாரணியா பீர்? வெளிவந்தது புதிய ஆய்வு முடிவு..

வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வதை விட பீர் அருந்துவதென்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற முடிவு உண்மைதான், ஆனால் பீர் வேறு பல பக்க விளைவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது

News image

பாராசிட்டமாலை விட சிறந்த வலி நிவாரணி பீர்!

Updated On :26 நவம்பர் 2019, 6:21 am

இனிமேல் கடுமையான தலைவலி என்றால் நீங்கள் பாராசிட்டமால் உள்ளிட்ட வலிநிவாரணிகளைத் தேடி ஓட வேண்டியதில்லை. நேராக ஒரு டின் பீர் வாங்கி உடைத்து ஒரே ‘கல்ப்’பில் இரண்டு கிளாஸ் பீர் அடித்தீர்கள் என்றால் போதும் தலைவலி போயே போச்சு, இட்ஸ் கான், போயிந்தி! இதை நான் சொல்லவில்லை கிரீன்விச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அதாகப்பட்டது என்னவென்றால்? கிரீன்விச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஏறக்குறைய  400 க்கும் மேற்பட்டவர்களிடம் மொத்தம் 18 விதமான ஆய்வுகளை மேற்கொண்டனர், அப்போது அவர்களுக்குத் தெரிய வந்தது 2 pint (கிட்டத்தட்ட 2 கிளாஸ்) அளவுக்கு பீர் அருந்தினால் 25% வலிநிவாரணம் கிடைக்கிறது என. அதாவது, பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளை உட்கொள்ளாமல் வெறும் பீர் அருந்தியே வலி நிவாரணம் பெற முடியும் எனக் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது ஆல்கஹால் மிகச்சிறந்த வலிநிவாரணியாகச் செயல்படுவதை கண்டறிய முடிந்தது. மிகத்தீவிரமான வலிகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க மருத்துவ ரீதியாகவும் ஆல்கஹால் உதவுவதை இந்த ஆய்வின் மூலமாக நிறுவ முடிந்தது என அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், தொடர்ச்சியாக வலி இருப்பவர்கள் நீண்டகால வலி நிவாரணியாக இதையே எடுத்துக் கொள்ளத் தொடங்கினால் ஆரோக்கியத்துக்கு எதிரான விளைவுகளையும் இது கொண்டிருக்கிறது என்பது இதன் பாதகமான அம்சங்களில் ஒன்று.

ஆனால், இங்கு மற்றும் இரு  முக்கியமான விஷயங்களை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.  அவை என்னவென்றால்?

  • மிதமான அளவில் பீர் அருந்துவதால்  முதலில் இரத்த ஆல்கஹால் அளவை 0.08 சதவிகிதம் உயர்த்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். 
  • அடுத்ததாக, பீர் நமது உடலுக்கு வலியைத் தாங்கக்கூடிய திறனைத் தருவதால் வலி குறைந்தது போல நம்மால் உணர முடியும்.

லண்டனின் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய டாக்டர் ட்ரெவர் தாம்சன் மேலும் ஆய்வு குறித்துக் கூறுகையில், “ஆல்கஹால் ஒரு சிறந்த வலி நிவாரணி மருந்து என்பதற்கான வலுவான ஆதாரங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதை கோடீன் போன்ற ஓபியாய்டு மருந்துகளுடன் ஒப்பிடலாம் மற்றும் இதன் விளைவு பாராசிட்டமாலை விட சக்தி வாய்ந்தது. " என்கிறார்.

இந்த ஆய்வு முடிவின் மூலம் ஒரு விஷயம் உறுதியாகியிருக்கிறது. வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வதை விட பீர் அருந்துவதென்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற முடிவு உண்மைதான், ஆனால் பீர் வேறு பல பக்க விளைவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது, எனவே நீங்கள் எப்போதும் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும் முன் எப்படி மருத்துவரின் ஆலோசனையைக் கேட்பீர்களோ? அதே போல பீர் அருந்துவது குறித்தும் உங்களது குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகே இத்தகைய வலி நிவாரண முறையைப் பின்பற்ற வேண்டும்.

Related Article

தமிழ்நாட்டிலும் இவர்கள்  உட்கார வைக்கப் படலாமே?!

ராத்திரி சரியான தூக்கமில்லையா? அப்போ உடனே எக்ஸ்பர்ட் சொல்றதைக் கேளுங்க!

சாமி கும்பிடுவது போல நடித்து அம்மன் கிரீடத்தை அலேக்காகத் திருடிச் சென்ற பலே திருடன்! (விடியோ)

ஆன்லைன் காதலியைப் பார்க்க ஸ்விட்சர்லாந்து செல்லும் வழியில் பாகிஸ்தான் சிறையில் அடைபட்ட இளைஞர்!

முதுகில் கட்டிய மூங்கில் கூடையுடன் 10 கிமீ நடந்து சென்று காய்கறி வாங்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.