ரயில் பாடகி ரானு மாண்டல் குறித்து லதா மங்கேஷ்கர்...

லதா மங்கேஷ்கர் போலவே பாடுகிறார் என்று பாராட்டி கொல்கத்தா ரயில்நிலையத்திலிருந்து ரானு மண்டல் எனும் பெண்மணியை அழைத்து வந்து பாலிவுட் உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறது.
ரயில் பாடகி ரானு மாண்டல் குறித்து லதா மங்கேஷ்கர்...

‘என்னைப் போலவே ஒருவர் பாடுகிறார் என்றால் அது பாராட்டத்தக்கது தான். என் பெயரும், பாடல்களும் ஒருவருக்குச் சிறப்பு செய்கிறதென்றால் அது எனக்குப் பெருமைக்குரிய விஷயம் தான். அதெல்லாம் அந்தந்த நேரத்துச் சந்தோசங்கள்.; ஆனால், அதே பாடகர்கள், தங்களது குரல் நிலைத்து நிற்கவேண்டுமென்றால் பிறரை இமிடேட் செய்து பாடுவதை விட்டு விட்டு தங்களுக்கான ஸ்பெஷல் குரலை அடையாளம் காணவேண்டும். அதுவே அவர்களது தனித்த அடையாளமாக நீடித்து நிற்கும். நான் நிறைய இசை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்கிறேன். அதில் பங்கேற்கும் குழந்தைகள் மிக அழகாக என்னைப் போலவே பாடுகிறார்கள். அதைப் பார்த்து நான் சந்தோசப்படுகிறேன். ஆனால், அந்தக் குழந்தைகளில் யாரெல்லாம் இன்று பாடகர்களாக நிலைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஸ்ரேயா கோஷலும், சுனிதி செளஹானும் மட்டும் தான். எனவே என் பாடல்களையும், ஆஷாவின் பாடல்களையும்( லதா மங்கேஷ்கரின் தங்கை), கிஷோர் தாஸ் பாடல்களையும், ராஃபி பையா பாடல்களையும் இமிடேட் செய்பவர்கள் கூடிய மட்டும் தங்களது ஒரிஜினல் குரலை மிக விரைவில் அடையாளம் கண்டு அந்தக் குரலில் பாடக் கற்றுக் கொள்ளவேண்டும். அப்போது தான் இங்கே நிலைத்து நிற்க முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக நான் என் தங்கை ஆஷாவையே கூறுவேன். அவள் மட்டும் என் நிழல் போல என்னையே பின்பற்றத் தொடங்கி இருந்தால் என்று வையுங்கள், இன்று காணாமால் போயிருப்பாள். ஆஷா, தனக்கென பிரத்யேகமான குரல் வளத்தை வளர்த்துக் கொண்டு இன்று சாதித்து விட்டாள். அதைத்தான் நான் என்னை இமிடேட் செய்யும் எல்லோருக்கும் உதாரணமாகக் கூறுவேன்.’

- லதா மங்கேஷ்கர் போலவே பாடுகிறார் என்று பாராட்டி கொல்கத்தா ரயில்நிலையத்திலிருந்து ரானு மண்டல் எனும் பெண்மணியை அழைத்து வந்து பாலிவுட் உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அவரது குரல் வசீகரமானது. அட்சர சுத்தமாக லதா மங்கேஷ்கர் போலவே பாடுகிறார். அதனால் தனது படமொன்றில் அவரை அழைத்து வந்து பாட வைத்திருக்கிறார் ஹிமேஷ் ரேஸம்மியா எனும் இசையமைப்பாளர் கம் நடிகர். அதைப் பற்றிய கேள்விக்கு லதா மங்கேஷ்கர் அளித்த பதில் தான் மேலே சொல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com