கணவரது இறந்த உடலைப் பார்த்த கணமே தானும் உயிரற்று விழுந்தார் மனைவி. வயோதிகத்திலும் இவர்களது காதல் உன்னதமானது என்பதை நிரூபிப்பதைப் போலிருந்தது. இது நடந்திருப்பது ஒதிஷாவில்.
ஒதிசா மாநிலம் நயகரைச் சேர்ந்தவர்கள் அயிந்தா நாயக் (75) மற்றும் சுகுரி நாயக் தம்பதிகள். சமீபகாலமாகவே இவர்கள் இருவருமே வயோதிகத்தினாலான உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் அயிந்தா நாயக் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மரணத்தைத் தழுவினார். கணவர் மரணமடைந்த போது மனைவி சுகுரி நாயக் வீட்டில் இல்லை. அவர் தனது சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அச்சமயத்தில் சுகுரியிடம் அவரது கணவரது மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டது. உடனே கணவரைக் காண வேண்டும் என விழுந்தடித்துப் புறப்பட்ட சுகுரி, வீட்டுக்கு வந்து கணவரது உடல் கிடத்தப்பட்டிருந்ததைக் கண்டார். அக்கணமே தானும் வேரற்ற மரம் போல கீழே விழுந்தார். கணவரை இழந்த துக்கம் தாளாமல் சுகுரியும் மரணத்தைத் தழுவியது சற்று நேரத்திற்குப் பின்னரே தெரிய வந்தது. கணவரும், மனைவியும் ஒரே நாளில் அடுத்தடுத்து மரணமடைந்த இச்செய்தி அங்கிருந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கியது.
கணவன், மனைவி இருவருமே பூரணமாக வாழ்ந்து தாம்பத்ய வாழ்வின் அத்தனை கஷ்ட நஷ்டங்களிலும் உடனிருந்து இணைந்து செயல்பட்டு இறுதியில் மரணத்திலும் இணைந்து கொண்ட அதிசயத்தைக் கண்டு இவர்களது சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்த கிராமத்தினர் அனைவரும் திரண்டிருந்தனர்.
இருவரது உடல்களுமே ஒரே இடத்தில் அருகருகே வைத்து எரியூட்டப்பட்ட காட்சி காண்போர் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.
தம்பதிகளின் அத்யந்த உறவைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டே இறுதிச் சடங்கிற்கு கூடியவர்கள் கலைந்தனர்.
Related Article
மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பிய வேலூர் தந்தைக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!
ரயில் பாடகி ரானு மாண்டல் குறித்து லதா மங்கேஷ்கர்...
பள்ளிக்குச் செல்கிறார் இளவரசி... அரண்மனையின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
கோயம்பேட்டில் காய்கறிகள்-பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: பருவ மழை எதிரொலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


