புதுசா செல்ஃபோன் வாங்கி இருக்கீங்களா? ஒரு நிமிஷம் இதை படிச்சிடுங்க!

புதுசா செல்ஃபோன் வாங்கி இருக்கீங்களா? ஒரு நிமிஷம் இதை படிச்சிடுங்க!

தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் புது மாடல்கள்

தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் புது மாடல்கள், புதிய செல்ஃபோன் கம்பெனிகள் என வளர்ந்து வருகிறது.

தெருக்கு தெரு செல்ஃபோன் கடைகள் சிறியதும் பெரியதுமாக பெருகி வரும் நிலையில், பலருக்கு பழைய ஃபோன் சீக்கிரமே அலுத்து புது ஃபோன் மோகம் தலைதூக்குகிறது.

இவர்களை மையமாக வைத்து செல்ஃபோன் கம்பெனிகள் அமோகமாக வளர்ந்து வருகின்றன. பெரிய கடைகள் முதல் ஆன்லைன் வரை விற்கப்படும் புது மாடல் செல்ஃபோன் பல சலுகைகளுடன் உங்கள் கையில் வந்து சேர்ந்துவிட்டது. அடுத்து என்ன? 

புது ஃபோனா அதைச் செய்யாதீங்க இது சரியில்லை என்று பலர் இலவச ஆலோசனைகள் வழங்குவார்கள். அவை என்ன என்று பார்க்கலாம்.

ஒரு ஸ்மார்ட்ஃபோனை பாக்ஸிலிருந்து எடுத்தவுடன் எட்டு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது இரவு முழுவதும் சார்ஜில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பேட்டரிக்கு லைஃப் என்று சிலர் சொல்வார்கள் அது தவறான தகவல். புது ஸ்மார்போனை பாக்ஸிலிருந்து எடுத்த உடன் சார்ஜ் செய்து கொள்ளலாம். அது பிரச்னையில்லை. ஆனால் நீண்ட நேரம் சார்ஜ் செய்யத் தேவையில்லை. செல்ஃபோன் கம்பெனி ஏற்கனவே செக் செய்து, சார்ஜ் செய்துதான் அனுப்பியிருப்பார்கள். 100 சதவிகிதம் வரும் வரையில் சார்ஜ் போட்டால் போதுமானது.

அடுத்து  மொபைல் ஃபோனை சார்ஜ் செய்யும் போது பயன்படுத்தக் பண்ணக் கூடாது என்பார்கள். அது உண்மைதான் என்றாலும் உங்கள் ஃபோன் எத்தகையது என்பதை முதலில் பார்க்க வேண்டும். சார்ஜில் இருக்கும் போது அதிகப்படியான சூட்டுடன் இருந்தால் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. கேம்ஸ் விளையாடக் கூடாது. சார்ஜ் போட்டு பேசிக் கொண்டிருந்தால் கூட ஹீட் அதிகம் இருந்தால் நிச்சயம் பிரச்னைதான். 

உங்கள் ஃபோனுடன் வந்த சார்ஜரை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் அறிவுர சொல்வார்கள். அதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதில்லை. உங்கள் சார்ஜரை பயன்படுத்தும் போது மற்ற சார்ஜர்களை விட வேகமாக சார்ஜ் ஏறும். மற்றவை சற்று தாமதமாக சார்ஜ் ஏறுவதாக இருக்கலாம். அவசரத்துக்கு சீன தயாரிப்பு சார்ஜர்களை அல்லது கம்பெனி ப்ராண்டை நகல் எடுத்து விற்கும் டியூப்ளிகேட் சார்ஜர்களைப் பயன்படுத்தினால் நிச்சயம் மொபைல் அம்போதான்.

உங்கள் ஃபோனுடன் வந்திருக்கும் ஒரு குறிப்பு புத்தகத்தைப் படித்து பாருங்கள். அது சிறிய எழுத்துருவில் இருந்தாலும், உங்கள் ஃபோனுக்குரிய பாலபாடம் அதுவே. அதில் விரிவாக எதை செய்யலாம் எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை விளக்கி இருப்பார்கள். அதை ஒரு முறை படித்துவிடுங்கள்.

பிறகு என்ன? அடுத்த ஃபோன் வாங்கும் வரை இந்த ஃபோனை பத்திரமாகப் பயன்படுத்துங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com