ஆன்ட்டின்னு கூப்பிடனுமா? சென்னைக்கு வாங்க! இங்க பாட்டின்னு சொன்னாத்தான் கோபத்துல முகம் சிவக்கிறாங்க!

சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... இங்கே ‘பாட்டி’ என்ற சொல்லே அந்நியச் சொல்லாகத்தான் கருதப்படுகிறது. நிஜமாகவே 60 வயதைக் கடந்தவர்களைக் கூட ஒரு 18 வயதுப் பையனோ, பெண்ணோ பாட்டி என்று மறந்தும் அழைத்து
ஆன்ட்டின்னு கூப்பிடனுமா? சென்னைக்கு வாங்க! இங்க பாட்டின்னு சொன்னாத்தான் கோபத்துல முகம் சிவக்கிறாங்க!

நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டின் எதிரில் ஒரு அம்மாள் இருந்தார். வயது 48 லிருந்து 50 க்குள் இருக்கலாம். பக்கத்து வீட்டுச் சின்ன வாண்டு, அவனுக்கு 2 வயது தான்... அவன், இந்த அம்மாளை ஒருமுறை ‘பாட்டி’ என அழைத்து விட்டான். அவ்வளவு தான், அந்தம்மாள் பொங்கி எழாத குறை! ‘ஏய், என்ன, என்னைப் போய் பாட்டின்னு சொல்ற? நான் இன்னும் எம்பொண்ணைக் கட்டிக் கொடுக்கல, அவளுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்து அது என்னைப் பாட்டின்னு கூப்பிடற வரைக்கும் நான் ஆண்ட்டியாவே இருக்கேன் டா.. இனிமே பாட்டின்னு கூப்பிட்டா உதைப்பேன் உன்னை. ஆண்ட்டின்னு தான் சொல்லனும் என்ன புரியுதா?’ என்று கோபத்தில் முகம் சிவந்தார்.

சிலர், அப்படித்தான் இருக்கிறார்கள். அவரை விட, அவரிடம் வாங்கிக் கொண்ட அந்தக் குட்டிப் பையனின் பாட்டிக்கு ஐந்தாறு வயதாவது குறைவாகத்தான் இருக்கும். அவரிடம் கேட்டால், 

‘அதற்கென்ன செய்வது? எனக்கு 19 வயசுல கல்யாணம் ஆயிருச்சும்மா.. சீக்கிரமே பேரன், பேத்தி எடுத்துட்டேன். அதுக்காக எம்பேரன் வயசுல இருக்கறவங்க என்னைப் பாட்டின்னு கூப்பிடறதுல எனக்கொன்னும் பிரச்னை இல்லம்மா.. ’ 
- என்பார்.

மனிதர்களில் இப்படிப் பட்டவர்களும் இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களும் இருக்கிறார்கள். இது அவரவர் மனப் பிரச்னை! இதைப் போய் பெரிதுபடுத்த என்ன இருக்கிறது?

சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... இங்கே ‘பாட்டி’ என்ற சொல்லே அந்நியச் சொல்லாகத்தான் கருதப்படுகிறது. நிஜமாகவே 60 வயதைக் கடந்தவர்களைக் கூட ஒரு 18 வயதுப் பையனோ, பெண்ணோ பாட்டி என்று மறந்தும் அழைத்து விட முடியாது. அப்படி அழைத்து விட்டால் இங்கு பலரும் மனதுக்குள் ‘ஸ்வரா பாஸ்கர்கள்’ தான். எனவே தான் ஆன்ட்டி என்ற சொல்லே இங்கு பாட்டிகளைச் சுட்டவும் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

சரி, அவர்களுக்கு அது தான் கம்ஃபோர்ட் லெவல் என்றால் அதற்குரிய மரியாதையைத் தர இந்தச் சமூகம் ஏன் தயங்க வேண்டும்? தன்னை ஒருவர் எப்படி அழைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார்? எதிரிலிருப்பவரா? அல்லது நாமே தானா? ஆளுமைத்திறன் சார்ந்த இந்தக் கேள்விக்கான பதில் அவரவரிடமே இருக்கிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் குடியேற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளான பல வயதான பெண்களின் ஒரே கவலை. இந்த நகரம் தங்களை ‘ஆயாக்கள்’ ஆக்கி விட்டதே! என்பதாக இருக்கிறது. இந்தக் கொடுமையை என்ன சொல்ல? சென்னையைப் பொருத்தவரை ‘ஆயா’ என்பது ‘பாட்டி’ யின் மாற்று. ஆனால், ஊர்ப்பக்கம்மிருந்து இங்கே வந்து செட்டில் ஆனவர்களுக்கு அது ஆஸ்பத்திரி ஆயாக்களைச் சுட்ட உதவும் சொல்.

இப்படிச் சென்று கொண்டிருக்கிறது மரியாதை நிமித்த உறவுமுறைப் பிரயோகங்கள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com