"நம்ப முடியாத கனவெல்லாம் வருது டாக்டர்''
"எந்த மாதிரி கனவு?''
"என் மனைவி நான் சொல்றதையெல்லாம் செய்யிற மாதிரி டாக்டர்''
**
"செஸ் விளையாட்டைக் கண்டுபிடிச்சது ஒரு பெண்ணாகத்தான் இருக்கும்னு
சொல்றியே... எப்படி?''
"ராணி மட்டும் எப்படி வேணா போகலாம். ஆனால் ராஜாவுக்கு மட்டும்தான் செக் வைக்க முடியும்னா... அதுக்கு என்னங்க அர்த்தம்?''
- வி.ரேவதி, தஞ்சை.

"கூகுள்ல என்ன தேடுறீங்க?''
"எனக்கு இன்னிக்கு மனசு சரியில்லே... அது ஏன்னு சர்ச் பண்றேன்''
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

"ஹோட்டலுக்கு "நல்ல ஹோட்டல்'ன்னு பெயர் வச்சிருக்கீங்களே... ஏன்?''
"வெளியூரிலிருந்து வர்றவங்க இங்க நல்ல ஹோட்டல் எங்கே இருக்குன்னுதானே கேட்குறாங்க... அதான்''
- சரஸ்வதி செந்தில், பொறையார்.
கணவன்: என் சட்டைப் பையில் ஐநூறு ரூபாய் வைத்திருந்தேன்... பார்த்தியா?
மனைவி: ஐயய்யோ...
பார்க்காம விட்டுட்டேனே...
- கு.அருணாசலம், தென்காசி.
"பேசிக்கிட்டே கொஞ்ச தூரம் நடக்கலாம் வர்றீங்களா?''
"சாரி... நான் வரலை... நீங்க மட்டும் தனியா பேசிக்கிட்டே நடந்து போய் வாங்க''
- ஏ.நாகராஜன், பம்மல்.

• "நான் எப்படியாவது கின்னஸ்ல இடம் பிடிக்கப் போறேன்?''
"என்ன சாதனை செய்யப் போறே?''
"கின்னஸ்ல இடம் பிடிக்கப் போறேன்னு நெறையாப் பேர்கிட்ட சொல்லித்தான்''
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
•"கல்யாணம் நடத்தும் அந்த நபர் மன்னர் அதியமான் பரம்பரையைச் சேர்ந்தவரா...''
"எதை வச்சு அப்படிச் சொல்றீங்க?''
"தாம்பூலப் பையில் நெல்லிக்கனி போட்டுக் கொடுக்குறாரே''
- கே.முத்தூஸ், தொண்டி.

•"வீட்டோட மாப்பிள்ளையாத்தானே போறே? எதுக்கு பெட்டி, படுக்கையைக் கூட கையிலே எடுத்துட்டுப் போறே?''
"சண்டை வந்தா பெட்டி, படுக்கையைத் தூக்கிக்கிட்டு கிளம்பினாத்தானே கொஞ்சமாவது மரியாதையா இருக்கும்''
- வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பப்பு யாதவ் மீது காலணி வீச்சு: இருவரைப் பிடித்து விசாரணை

3.8.1976: த.நா.க்கு கிருஷ்ணராஜசாகர் நீர் - 500 கோடி கன அடி தண்ணீர் வருகிறது

தமிழகத்தில் விரைவில் ‘ஏா் ஆம்புலன்ஸ்’ சேவை! - அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்
இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



