நியூயார்க்கில் சுரங்கப்பாதை ரயிலில் பயணி ஒருவர், இருக்கை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாஸை ஊற்றியுள்ளார்.
நியூயார்க் நகரில் சுரங்கப்பாதை ரயிலில் தினமும் பயணிக்கும் பயணி ஒருவர் ரயிலில் கூட்டமாக இருப்பதால் இருக்கை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'வித்தியாசமான முயற்சி'யில் ஈடுபட்டுள்ளார்.
அவர் தனது நிறுத்தம் வந்ததும், தான் அமர்ந்த இருக்கையிலும், இருக்கைக்கு கீழும் தக்காளி சாஸை ஊற்றியுள்ளார். இதனால் அந்த இடத்தில் யாரும் அமர மாட்டார்கள் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்துள்ளார்.
அந்த ரயிலில் பயணித்த பத்திரிகையாளர் பெர்வைஸ் ஷல்வானி என்பவர் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'இன்று காலை ரயிலில் ஒருவர் தனது இருக்கையை யாருக்கும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில், தனது பையில் இருந்து கெட்ச்அப் பாட்டிலை எடுத்து இருக்கையில் ஊற்றினார்' என பதிவிட்டுள்ளார். மேலும், அதிகாரிகள் இதனை கவனித்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் பயணிக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதனை மிகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக்கொண்டு, கமெண்ட் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


