பனிக்கட்டி நீரில் நீந்தி நூலிழையில் உயிர் தப்பிய டிக்டாக் பயனர் ஒருவரின் விடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பிரபல மொபைல் செயலியான டிக்டாக் இன்று பலருக்கு சிறந்த பொழுதுபோக்குத் தளமாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். பயனர்கள் தங்களது பக்கத்தையும் பலர் பின்தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் வித்தியாசமான விடியோக்களை எடுத்து டிக்டாக்கில் பதிவு செய்கின்றனர். அவ்வாறு யாரும் செய்யாத ஒரு செயலை முயற்சிக்கும்போது சில விபரீதங்களும் நிகழ்கின்றன. டிக்டாக் விபரீதங்களினால் ஏற்படும் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், டிக்டாக் பயனர் ஒருவர் சமீபத்தில் பனிக்கட்டி நீரில் நீந்தி ஒரு வீடியோவைப் பதிவு செய்ய முடிவெடுத்தார். அதன்படி, நீரின் மேற்பகுதியில் சூழ்ந்திருக்கும் பனிக்கட்டியை உடைத்து உள்ளே நீந்திச் சென்றார். சிறிது நேரத்தில் மூச்சுவிட முடியாமல் சிரமப்படவே, பனிக்கட்டி துளையை கண்டுபிடிக்க போராடி, இறுதியாக துளையினை கண்டுபிடித்து உயிர் பிழைத்தார். பார்ப்பவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் இந்த விடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்று தொடர்ந்து அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விடியோவுக்கு கலவையான பல விமர்சனங்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

