உங்கள் முகம் ரோசாப்பூ போல அழகாக வேண்டுமா? இதை தினமும் பயன்படுத்துங்கள்
குளிர்காலத்தில் கடுமையான காற்று உங்கள் முகத்தின் மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்துவிடும்.


குளிர்காலத்தில் கடுமையான காற்று உங்கள் முகத்தின் மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்துவிடலாம். தேவையற்ற சிறு சுருக்கங்கள் அல்லது கோடுகளை முகத்தில் உருவாக்கி உங்கள் அழகிய தோற்றத்தைத் கெடுக்கலாம். இதற்கு தீர்வாக பன்னீரைத் (ரோஸ் வாட்டர்) தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்கள் சருமப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். முகத்திலுள்ள மாசுக்களை அகற்றக் கூடிய சக்தி ரோஸ் வாட்டருக்கு உண்டு என்பது பலருக்குத் தெரியாது. மேலும் இது வீட்டில் ஃபேஸ் பேக்குகள் / ஸ்க்ரப்களை உருவாக்கவும் பயன்படுகிறது. அனைத்து சரும வகைகளுக்கும் வரம் இந்த ரோஸ் வாட்டர். அதன் நன்மைகள் இதோ:

உங்கள் சருமத்தின் தரம் குறைவதற்குக் காரணம் நீங்கள் செய்யும் மோசமானத் தேர்வுகள்தான். கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் திரையின் முன்னால் நீண்ட நேரம் இருப்பது, மிகக் குறைவான நேரத் தூக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் உங்கள் சருமம் பாதிப்படையும். குறிப்பாக உங்கள் கண்களைச் சுற்றி கருவளையத்தை ஏற்படுத்திவிடும். கண்களுக்குக் கீழே சில சமயம் பைப் போன்ற சதைப்பற்று உருவாகும். அந்தப் பைகளை அகற்ற நீங்கள் விலை உயர்ந்த கண் கிரீம்கள் வாங்கித் தடவலாம். ஆனால் அவை எல்லாம் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைத் தராது. உடனடித் தீர்வாக தினமும் சிறிதளவு ரோஸ்வாட்டரைப் பயன்படுத்துவது எளிது.

எண்ணெய்ச் சருமம் உள்ளவர்களுக்கு குளிர்காலம் மிகவும் சிறந்தது. ஆனாலும், இது சருமத்துக்கு ஆபத்தில்லை என்றும் கூறிவிட முடியாது. ஒரு நாளைக்கு ஒரு முறை ரோஸ் வாட்டர் மூலம் உங்கள் முகத்தை சுத்தம் செய்வதால் நுண் துவாரங்கள் திறந்து சருமத்துக்குத் தேவையான ஊட்டம் கிடைக்கும். ரோஸ் வாட்டர் முகத்தில் படிந்துள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் குறைப்பதற்கும் உதவும்.

பொதுவாக மழை மற்றும் குளிர் காலநிலை என்றால், சருமத்தைச் சீராக்க அதிக மாய்ஸ்சரைசர் தேவைப்படும். இந்தப் பருவத்திற்கான உங்கள் பிரச்னை 'மாய்ஸ்சரைசர் போதுமானதாக இல்லை' என்பதுதான். நாள் முழுவதும் நம் சருமம் வறட்சி அடையாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் மாய்ஸ்சரைசர்களுக்கு பெரும்பாலோர் நிறைய பணம் செலவழிப்பார்கள். ஆனால் இரவிலும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அதே வகையில் முக்கியம். உங்கள் சருமத்தை நீரோட்டமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க ரோஸ்வாட்டரைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

ரோஸ்வாட்டர் முகப்பரு மற்றும் தோல் அரிப்பு அழற்சியால் ஏற்படும் சிவத்தல் மற்றும் எரிச்சலுக்கு நிவாரணம் அளிக்கப் பயன்படுகிறது. இதில் ஆன்டி-பாக்டீரியா இருப்பதால் சருமப் பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும் அதன் செறிவூட்டப்பட்டப் பண்புகள் சேதமடைந்த தோல் செல்கள் மற்றும் திசுக்களை மீட்டெடுக்க உதவுகின்றன. தொடர்ந்து பயன்படுத்த சரும வயதைக் குறைக்கிறது.

பனிக்காலம் பெரும்பாலோருக்கு சற்று பிரச்னைக்குரியதாக இருக்கும். ரோஸ்வாட்டர் அரோமாதெரபியாக இச்சமயங்களில் பயன்படுத்தலாம். அதன் இனிமையான வாசனை நல்ல மனநிலையைத் தரும். அது மட்டுமல்லாமல் பதற்றத்தை சமாளிக்கச் சிறந்த வழியாகவும் கருதப்படுகிறது. ரோஸ் வாட்டரில் ஊற்றப்பட்ட மெழுகுவர்த்திகளை வாங்கி வீட்டில் ஏற்றி வைக்கலாம் அல்லது சுற்றுப்புறத்தை நறுமணத்தால் ஒளிரச் செய்ய உங்கள் அறையைச் சுற்றி ரோஸ் வாட்டரைத் தெளிக்கலாம்.

ரோஸ்வாட்டர் என்பது உங்கள் சருமத்திற்கு மட்டுமான வரமல்ல, உங்கள் தலைமுடிக்கும் சில அதிசயங்களை அது செய்யும். லேசான அளவிலான வீக்கத்திற்கு ரோஸ்வாட்டர் சிகிச்சைப் பயன் தரும். உங்கள் உச்சந்தலையில் இருந்து பொடுகை ரோஸ்வாட்டர் பயன்படுத்தி நீக்க முடியும். உங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்குளில் ரோஸ் வாட்டரைக் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம. சில துளிகள் ரோஸ் வாட்டரை உங்கள் உச்சந்தலையில் தேய்த்துக் கொள்வதால் வாசனையாக இருக்கும். மேலும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

ரோஸ்வாட்டரைப் பற்றிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் சருமப் பிரச்னைகள் அத்தனைக்கும் எளிய தீர்வாகச் செயல்படும். டோனரைப் போல உங்கள் முகத்தில் நேரடியாக தெளிக்கச் செய்யலாம் அல்லது ஃபேஸ் பேக்கில் நேரடியாக கலக்கலாம். ரோஸ்வாட்டரை தவறாமல் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் பளபளப்பாகவும் குளிர்காலத்திலும் ஜொலி ஜொலிப்புடன் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...